ஜிவி பிரகாஷ் -கௌதம் மேனன் நடிப்பில் வெளியாகும் செல்ஃபி... சென்சார்ல யூஏ கிடைச்சிருக்கு!
சென்னை : நடிகர் ஜிவி பிரகாஷ், கௌதம் மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் செல்ஃபி. இயக்குநர் வெற்றிமாறனுடன் உதவி இயக்குநராக பணியாற்றிய மதிமாறன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். நீட் தேர்வை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஜிவி பிரகாஷ்குமார்
நடிகரும் பிரபல இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் பேச்சுலர், ஜெயில் போன்ற படங்கள் வெளியாகி இவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது. அதிகமான படங்களில் நடிப்பதுடன் அந்தப் படங்களுக்கு இசையும் அமைத்து வருகிறார்.

செல்ஃபி படம்
இதுமட்டுமின்றி மற்ற நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் வரும் 1ம் தேதி இவரது செல்ஃபி படம் ரிலீசாக உள்ளது. இவருடன் கௌதம் மேனன், வர்ஷா பொல்லம்மா, வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், தங்கதுரை ஆகியோர் நடித்துள்ளனர். நீட் தேர்வை மையமாக கொண்டு படம் உருவாகியுள்ளது.

ஜிவி பிரகாஷ் இசை
படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். சமீபத்தில் சென்னையில் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக வெற்றிமாறன் மற்றும் மிஷ்கின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

29 நாட்களில் சூட்டிங் நிறைவு
படத்தை வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மதிமாறன் இயக்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்பை இவர் 29 நாட்களில் முடித்துள்ளார். இந்தக் கதைக்கு ஜிவி பிரகாஷ் மிகவும் சிறப்பாக பொருந்தியுள்ளதாக கூறப்படுகிறது. படம் வரும் ஏப்ரல் 1ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

யூஏ சான்றிதழ்
படத்தின் ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் படம் சென்சார் செய்யப்பட்டு யூஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்தின் டீசர், ட்ரெயிலர், பாடல்கள் வெளியாகி நல்ல கமெண்ட்களை பெற்றுள்ள நிலையில் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











