“நீட் எல்லாம் தடுக்க முடியாது“.. அனல் பறக்கும் வசனம்.. செல்ஃபி டிரைலர் அவுட்!

சென்னை : ஜி.வி பிரகாஷ் நடிக்கும் செல்ஃபி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

இப்படத்தை, வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக இருந்த மதிமாறன் இயக்கி உள்ளார்.

ஜி.வி பிரகாஷூக்கு ஜோடியாக பிகில் படப்புகழ் வர்ஷா பொல்லம்மா நடித்துள்ளார்.

ஜிவி பிரகாஷ்

ஜிவி பிரகாஷ்

இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவர் ஜி.வி.பிரகாஷ் குமார். தற்போது, வித்தியாசமான கதை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் பேச்சிலர், ஜெயில் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.

செல்ஃபி

செல்ஃபி

தற்போது ஜிவி பிரகாஷ்,இயக்குநர் மதிமாறன் இயக்கும் செல்ஃபி படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக வர்ஷா பொல்லம்மா நடிக்க, கெளதம் மேனன், வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், தங்கதுரை ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் படத்தின் ட்ரைலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

மிரட்டும டிரைலர்

மிரட்டும டிரைலர்

இந்த டிரைலரில், சொந்தமா யோசிக்க தெரியாத, மாணவர்கள் அவர்களின் பெற்றோர் தான் நம்ம டார்கெட் என கௌதம் மேனின் கம்பீரமான குரலுடன் டிரைலர் தொடங்குகிறது. தமிழகத்தில் பல மாணவர்களின் உயிர்களை காவு வாங்கிய நீட் தேர்வு குறித்து அனல் பறக்கம் வசனம் பேசப்பட்டுள்ளது. ஜி.வி பிரகாஷுடன் கெளதம் மேனன் இணைந்து மிரட்டும் இந்த ட்ரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

டபுள் ட்ரீட்

டபுள் ட்ரீட்

ஜி.வி பிரகாஷ், இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் உருவாகி உள்ள ஜெயில் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம், டிசம்பர் 9 ந் தேதி வெளியாக உள்ளது. மேலும், புதுமுக இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில், புதுமுக நடிகை திவ்யபாரதி உள்ளிட்டோர் நடித்துள்ள Bachelor திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை ரிலீஸாக உள்ளது.

இடிமுழக்கம்

இடிமுழக்கம்

சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி வரும், இடிமுழக்கம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதுவரை வந்த சீனு ராமசாமியின் படங்களில் சற்று மாறுதலாக, இப்படம் ஆக்‌ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருகிறது. ஸ்கைமேன் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் கலைமகன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின், முதற்கட்ட படப்பிடிப்பு தேனி நடைபெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X