வெற்றிமாறன்,விஜய் கூட்டணியா?... இசையமைப்பாளர் சொன்ன தகவல் !

சென்னை : வெற்றிமாறன், விஜய் கூட்டணி விரைவில் அமையலாம் என பிரபல இசையமைப்பாளர் சொன்ன தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வெற்றிமாறன். 2007ம் ஆண்டு பொல்லாதவன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து மீண்டும் தனுஷுடன் இணைந்து ஆடுகளம் படத்தை உருவாக்கி வெற்றிகண்ட வெற்றிமாறன். அந்த படத்திற்காக இரண்டு தேசிய விருதுகளை பெற்றார்.

GV Prakash said that, Vetrimaran and Vijay alliance will be formed soon.

ஆடுகளம் படம் மூலம் தேசிய அளவில் கவனிக்கத்தக்க இயக்குனராக மாறிய வெற்றிமாறன். விசாரணை படத்தை இயக்கினார், இந்த படத்தில் விசாரணை கைதி எதிர்கொள்ளும் அவலங்களை வெளிச்சம் போட்டு காட்டினார். இப்படமும் தேசிய விருதையும் வென்றது.

மீண்டும் தனுவை வைத்து வட சென்னை, அசுரன் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் இணைந்துவிட்டார் வெற்றிமாறன். தற்போது இவர் இயக்கத்தில் விடுதலை படம் உருவாகி வருகிறது. இதில் சூரி கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.

விடுதலை திரைப்படத்தை அடுத்து, சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்க உள்ளார். இத்திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். வாடிவாசல் திரைப்படத்திற்கு இசை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் இடம் பெறும் பாடல் வேறலெவலில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் வெற்றிமாறன் விஜய் இணையும் படம் பற்றி டிவிட்டரில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள ஜி.வி. மீண்டும் விஜய்யுடன் இணைய காமினேசன் அமைய வேண்டும் எனவும், வெற்றிமாறன், விஜய் இணையும் படத்தில் நீங்கள் பணிபுரிவீர்களா? என ரசிகர் கேட்டதற்கு கால்சீட், செட்யூல் சரியாக அமைந்து, விஜய், வெற்றிமாறன் தற்போது பணிபுரியும் படங்கள் முடிந்த பின் இந்த கூட்டணி அமையலாம் என ஜீவி பிரகாஷ் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X