ஜிவி பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து.. ஏ.ஆர்.ரஹ்மான் சொல்லியும் கேட்கலையாம்.. பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்

சென்னை: கோலிவுட்டின் ஹாட் டாபிக்காக இப்போது மாறியிருப்பது ஜிவி பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து. பல வருடங்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டு ஒரு மகளை பெற்றெடுத்த பிறகு அவர்கள் விவாகரத்து முடிவுக்கு வந்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. குறிப்பாக இரண்டு பேரும் Made For Each Other என்பதற்கேற்ப இருப்பார்கள் என்று ரசிகர்கள் கூறுவார்கள். இந்தச் சூழலில் ஜிவி பிரகாஷ் விவகாரம் குறித்து பயில்வான் ரங்கநாதன் சில விஷயங்களை பேசியிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜிவி பிரகாஷ். ஏராளமான படங்களுக்கு இசையமைத்த அவர் ஏ.ஆர்.ரஹ்மானின் அக்கா மகன் என்பது அனைவரும் அறிந்தது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசை எப்படி கேட்க கேட்க பிடிக்குமோ அதேபோல்தான் ஜிவி பிரகாஷின் இசையும். மெலோடி, ஃபோக் என எந்த ஜானர் கொடுத்தாலும் அதில் புகுந்து விளையாடுபவர் ஜிவி பிரகாஷ். அவரது இசைக்கென்று உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இயக்குநர் அனுராக் காஷ்யப்புக்கு பிடித்த இசையமைப்பாளர்களில் ஜிவியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

GV Prakash Saindhavi Divorce Bayilvan Ranganathan Reveals Shocking Information

நடிகர் ஜிவி பிரகாஷ்: இசை கரியர் பீக்கில் இருக்கும்போதே திடீரென நடிக்கவும் ஆரம்பித்தார் ஜிவி. அவர் நடித்த படங்களில் ஒரு சில படங்கள் தவிர்த்து பெரிதாக மற்ற படங்கள் பெயரை பெற்றுத்தரவில்லை. இருந்தாலும் ஜிவி பிரகாஷ் தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக டியர், கள்வன் ஆகிய படங்கள் வெளியாகின. ஆனால் அந்தப் படங்களும் சரியான வரவேற்பை பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

திருமணம்: இதற்கிடையே தனது பள்ளி கால தோழி சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு அன்வி என்ற மகள் இருக்கிறார். நிலைமை இப்படி இருக்க தாங்கள் விவாகரத்து செய்வதாக இரண்டு பேருமே ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுத்துவிட்டனர். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதேசமயம் கடந்த நான்கு வருடங்களாகவே அவர்களுக்குள் சுமூகமான சூழ்நிலை இல்லை; ஜிவி பிரகாஷ் நடிக்க வந்தது சைந்தவிக்கு பிடிக்கவில்லை என ஒரு தகவல் ஓடியது.

பயில்வான் பேட்டி: ஜிவி பிரகாஷும் சைந்தவியும் எதற்காக விவாகரத்து செய்கின்றனர் என்பதற்கான காரணத்தைத்தான் பலரும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் இந்த விவகாரம் குறித்து பேசியிருக்கிறார். அவர் பேசியிருக்கும் வீடியோவில், "ஜிவிக்கும் சைந்தவிக்கும் இப்போது நடந்திருக்கும் விவாகரத்து கடந்த நான்கு வருடங்களாகவே பரபரப்பாக பேசப்பட்டுவந்தது. ஜிவி பிரகாஷ் நடிக்க வந்தது சைந்தவிக்கு பிடிக்கவில்லை.

ரஹ்மான் பேசினார்: இரண்டு பேரும் விவாகரத்து செய்யப்போகிறார்கள் என்பதை அறிந்த ஏ.ஆர்.ரஹ்மான்; ஜிவி பிரகாஷை அழைத்து, 'குடும்பம் வேறு தொழில் வேறு. உனக்குதான் இசையமைக்க நிறைய படங்கள் வருகின்றனவே அதில் கவனம் செலுத்து; ஏன் நடிக்க வேண்டும் . இதனால் இப்போ பிரச்னைதானே வருகிறது' என்று சொன்னார். ஆனால் ஜிவி பிரகாஷ் கேட்கவில்லை.

ஜிவி நடிக்க வந்ததிலிருந்து சிறு சிறு விரிசல் ஜிவிக்கும் சைந்தவிக்கும் விழுந்தது. பேசி பேசி காம்பரமைஸ் ஆகிக்கொண்டார்கள். ஒருகட்டத்தில் இந்தப் பிரச்னை பெரிதாக ஆரம்பித்தது. அதனையடுத்து பிரகாஷ் வீட்டுக்கே வருவதில்லை. அடிக்கடி வெளியிலேயே தங்க ஆரம்பித்தார். இதுவும் அந்த விரிசலை மேலும் பெரிதாக்கியது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X