எங்க விஷயத்துல கற்பனையா அள்ளி விடாதீங்க.. சைந்தவியை தொடர்ந்து ஜிவி பிரகாஷும் காட்டம்!

சென்னை: நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடகர் என கோலிவுடில் பன்முகம் காட்டி வரும் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் பள்ளி காலத்தில் இருந்தே காதலித்து திருமணம் செய்து கொண்ட சூழலில் இவர்களது 11 ஆண்டுகால திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இருவரும் தாங்கள் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த கடினமான நேரத்தில் தங்களை சில youtube சேனல்கள் மேலும் இக்கட்டான சூழலுக்கு தள்ளி வருவதாக இருவருமே அடுத்தடுத்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து சைந்தவி தன்னுடை ய பதிவில் அடுத்தவர்களால் தங்களுக்கு விவாகரத்து ஆகவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளியுங்கள் என்றும் பதிவிட்டுள்ள சூழலில் இந்த பதிவை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் இணைத்து ஜிவி பிரகாசும் இதே கருத்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் இந்த கடினமான சூழலில் தங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருபவர்களுக்கும் அவர் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

GV Prakash amp amp Saindhavi express their sadness on Youtubers comments

ஜிவி பிரகாஷ் -சைந்தவி: நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் கடந்த 11 ஆண்டுகளாக மனமொத்த தம்பதிகளாக இருந்து வந்தனர். தங்களது பள்ளி பருவத்திலேயே காதலித்து குடும்பத்தினர் சம்மதத்துடன் இவர்கள் திருமணம் நடந்த சூழலில் கடந்த சில மாதங்களாகவே இவர்கள் பிரிய போவதாக தொடர்ந்து அடுத்தடுத்த செய்திகள் சமூக வலைதளங்களில் வெளிவந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக சைந்தவி, தான் ஜிவி பிரகாஷை பிரிய உள்ளதாக அறிவித்திருந்தார். தொடர்ந்து ஜிவி பிரகாசும் தங்களது பிரிவு குறித்து உறுதிப்படுத்தினார்.

24 ஆண்டுகால நட்பு: இவர்களது பிரிவு தான் தற்போது கோலிவுட்டில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இருவரும் மனமொத்து இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் 24 ஆண்டுகளாக தாங்கள் நட்புடன் உள்ள சூழலில் இந்த நட்பு தொடரும் என்றும் தற்போது சைந்தவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தங்களது முன்னேற்றத்திற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள சைந்தவி, ஆனால் ஏராளமான youtube சேனல்களில் தாங்கள் முன்னதாக பேசிய விஷயங்களை திரித்து தொடர்ந்து அவர்களது கற்பனை கதைகளை வெளியிடுவது வருத்தத்தை ஏற்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

ஆதாரம் இல்லாத படுகொலை: தங்களது விவாகரத்து வெளியில் உள்ளவர்களால் ஏற்படவில்லை என்றும் ஒருவரின் குணாதிசயத்தை ஆதாரம் இல்லாமல் படுகொலை செய்வது ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரது இந்த பதிவை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் இணைத்து ஜிவி பிரகாசும் இதே கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்த சேனல்கள் உண்மை இல்லாத தங்களது கற்பனை கதைகள் தொடர்ந்து வெளியிட்டு வருவதாகவும் இதன் மூலம் தனிப்பட்ட நபர்களின் சுதந்திரத்தை கொலை செய்வதாகவும் அவர் வருத்தத்தை பதிவு செய்துள்ளார். ஆனால் தங்களுக்கு தொடர்ந்து இந்த கடினமான நேரத்தில் ஆதரவாக இருந்து வரும் மற்றவர்களுக்கு நன்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

GV Prakash amp amp Saindhavi express their sadness on Youtubers comments

ஜிவி பிரகாஷ் -சைந்தவி காட்டம்: முன்னதாக இதே கருத்துக்களை ஜிவி பிரகாஷ் தெரிவித்திருந்தார். இரு மனங்கள் இணைவது மற்றும் பிரிவது குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது என்றும் பிரபலமாக இருப்பதாலேயே தனிப்பட்ட நபரின் வாழ்க்கையில் அத்துமீறி நுழைவது மற்றும் தரம் தாழ்ந்த விமர்சனங்களை வைப்பது ஏற்புடையதல்ல என்றும் அவர் கூறியிருந்தார். தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் தனிநபரின் வாழ்க்கை பாதிக்கும் என்பதை உணராக அளவிற்கு தமிழரின் மாண்பு குறைந்து விட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X