ஜிவி பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து.. திவ்யபாரதியை ஒருமையில் திட்டிய பிரபலம்..புது பஞ்சாயத்து ஸ்டார்ட்
சென்னை: ஜிவி பிரகாஷும், சைந்தவியும் பள்ளியில் படித்த காலத்திலிருந்தே காதலிக்க ஆரம்பித்தார்கள். இரண்டு பேரின் காதலும் பல வருடங்கள் நீடித்ததன் காரணமாக அவர்களது திருமணத்துக்கு இரண்டு வீடுகளிலும் சம்மதம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு அன்வி என்கிற மகள் இருக்கும் சூழலில் இரண்டு பேரும் சமீபத்தில் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றார்கள். இவர்களது பிரிவுக்கு நடிகை திவ்யபாரதிதான் காரணம் என்று தகவல்கள் தொடர்ந்து வட்டமடித்தன.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தமிழ் சினிமாவில் பிரபலமானவர். அவர் இசையமைத்த படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே பெரும்பாலும் ஹிட்டடிக்கக்கூடியவை. இதன் காரணமாக அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் ஜிவிக்கு திடீரென நடிக்கும் ஆசை வந்தது. அதன்படி டார்லிங் படத்தில் ஹீரோவாக அறிமுகமான அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்துவருகிறார். அவற்றில் சர்வம் தாளமயம், சிகப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட படங்கள் மட்டுமே ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. கடைசியாக நடித்த கிங்ஸ்டன் திரைப்படம்கூட தோல்வியைத்தான் சந்தித்தது.
சைந்தவியுடன் காதல், திருமணம்: இதற்கிடையே தான் பள்ளி படிக்கும் காலத்திலிருந்தே சைந்தவியை காதலித்தார் ஜிவி. இரண்டு பேரும் தீவிரமாக காதலித்துவந்தார்கள். அவர்களது காதலின் அடர்த்தியை புரிந்துகொண்ட குடும்பத்தார்கள் திருமணத்துக்கு சம்மதித்தார்கள். அதனையடுத்து கடந்த 2013ஆம் ஆண்டு இரண்டு பேருக்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கு அன்வி என்கிற மகளும் பிறந்தார். சைந்தவியும் பின்னணி பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. அவர்கள் இரண்டு பேரும் இணைந்து பணியாற்றிய பாடல்கள் எல்லாம் கல்ட் க்ளாசிக்காக இருப்பவை.
விவாகரத்து செய்துகொண்ட ஜோடி: இரண்டு பேரும் கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாக வலம் வந்துகொண்டிருந்த சூழலில்; கடந்த வருடம் அவர்கள் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அதனையடுத்து சமீபத்தில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்து சட்டப்பூர்வமாகவும் பிரிந்துவிட்டார்கள். தாங்கள் பிரிந்தாலும் இசை ரீதியாக எங்களது நட்பு தொடர்ந்துகொண்டுதா இருக்கும் என்று உறுதியாக தெரிவித்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திவ்யபாரதிதான் காரணமா?: சூழல் இப்படி இருக்க ஜிவி பிரகாஷும், சைந்தவியும் பிரிந்ததற்கு நடிகை திவ்யபாரதிதான் காரணம் என்று தகவல்கள் பரவின. ஆரம்பத்தில் இந்த விஷயத்தை திவ்யா பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் நாளுக்கு நாள் இந்த தகவல் அதிகமாக பரவியதால் மௌனம் கலைத்த அவர், 'ஒரு குடும்ப விஷயத்தில் எனது பெயரை தொடர்ந்து இழுக்கிறார்கள். ஆரம்பத்தில் பொறுத்துக்கொண்டேன். ஆனால் இப்போது எல்லை மீறி போயிருக்கிறது. நான் சினிமாவில் இருக்கும் ஆணுடனோ அல்லது திருமணமான ஆணுடனோ ஒருபோதும் டேட்டிங் செய்யமாட்டேன்' என்று கூறி இந்த வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார்.
பயில்வான் ரங்கநாதன் பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் இந்த விவகாரம் குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "திருமணமான நபருடன் டேட்டிங் செய்யமாட்டேன் என்று திவ்யபாரதி சொல்லியிருக்கிறார். அப்போ திருமணமாகாமல் இருந்தால் நீ டேட்டிங் செய்வியா. ஏன் இப்படி பேசுற?.. இதிலிருந்தே தெரியுது நீ எவ்வளவு மோசம் என்று. ஒழுங்காக ஒருவரை திருமணம் செய்த்கொண்டு அவரோடு வாழ வேண்டியதுதானே. இதெல்லாம் என்ன பேச்சு. எனக்கு சைந்தவி குடும்பத்தையும் தெரியும், ஜிவி பிரகாஷின் குடும்பத்தையும் தெரியும். சைந்தவி அவ்வளவு நல்ல பொண்ணு. அவருக்கு இப்படி நடந்திருக்கவேகூடாது" என்றார்.


Click it and Unblock the Notifications











