சிவகார்த்திகேயனின் பராசக்தி.. சம்பவம் செய்த ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க?

சென்னை: சூரரைப் போற்று படத்தை இயக்கி பெரும் கவனம் ஈர்த்தவர் சுதா கொங்கரா. மணிரத்னம், பாலா ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்த அவர் இப்போது சிவகார்த்திகேயனை வைத்து பராசக்தி படத்தை இயக்கிவருகிறார். இதில் சிவாவுடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரிய கவனத்தை ஈர்த்தது. இது எஸ்கேவுக்கு 25ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக இந்தப் படம் அவரது கரியரில் முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் கடந்த வருடம் தீபாவளிக்கு ரிலீஸானது. படம் மெகா ஹிட்டானது. இந்தப் படத்தை முடித்துவிட்டு அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்தார். அந்தப் படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்த சூழலில் முருகதாஸோ சல்மான் கானை வைத்து இயக்கும் படத்தின் வேலைகளுக்காக சென்றுவிட்டார். அதேபோல் சிபி சக்கரவர்த்தி இயக்கத்திலும் ஒரு படத்திலும், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்த்லும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

sivakarthikeyan parasakthi gv prakash

சுதா கொங்கராவுடன்: இதற்கிடையே சூரரைப் போற்று படத்தை இயக்கி கவனம் ஈர்த்த சுதா கொங்கரா சூர்யாவை வைத்து புறநானூறு படத்தை இயக்கவிருந்தார். அதற்கான அறிவிப்பும் வெளியானது. ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்திலிருந்து சூர்யா வெளியேறினார். அவரது வெளியேறலைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் உள்ளே வந்தார். அவருடன் ரவி மோகன், அதர்வா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

பராசக்தி: படத்துக்கு பராசக்தி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதன் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியானது. பீரியட் காலத்தில் நடக்கும் கதைக்களத்தை சுதா கையில் எடுத்திருக்கிறார். சிவா, அதர்வா, ரவி என அனைவருமே டைட்டில் டீசரில் மிரட்டுகிறார்கள். முக்கியமகா மாணவர்களை ஒன்று திரட்டி போராடும் கதையாக இதனை சுதா உருவாக்கியிருக்கிறார் என்று டீசரை பார்க்கையில் தெரிகிறது. அதுமட்டுமின்றி படத்தின் மையக்கரு ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து இருக்கும் எனவும் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.

மிரட்டிய ஜிவி பிரகாஷ்: படத்தின் டைட்டில் டீசரில் கவனம் ஈர்த்த இன்னொருவர் என்றால் அவர் ஜிவி பிரகாஷ். பின்னணி இசையை தரமாக கொடுத்திருக்கிறார். அதனை கேட்ட டைட்டில் டீசருக்கே இப்படி என்றால் முழு படத்துக்கும் எந்த மாதிரியான பின்னணி இசையை அமைத்திருப்பாரோ என்று இப்போது ரசிகர்கள் ஆவலோடு சமூக வலைதளங்களில் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு முன்னதாக சுதா கொங்கரா இயக்கிய சூரரைப் போற்று படத்துக்காகத்தான் ஜிவி தேசிய விருது வாங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

4 பாடல்கள்: இந்நிலையில் பராசக்தி படம் குறித்து பேசிய ஜிவி பிரகாஷ், "பராசக்தி படத்துக்காக ஏற்கனவே நான்கு பாடல்களை உருவாக்கிவிட்டேன். சுதா கொங்கராவுக்கு ரொம்பவே தனித்துவமான இசை ரசனை இருக்கிறது. இந்த நான்கு பாடல்களுமே சூப்பராக வந்திருக்கின்றன. கண்டிப்பாக இந்த நான்கு பாடல்களில் மூன்று பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டடிக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்றார். அவரது இந்தப் பேச்சு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X