ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீயின் சிறுவயது அரிய புகைப்படம்!

சென்னை : சினிமாவில் இசையமைப்பாளராக வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் ஜிவி பிரகாஷ்குமார் நடிப்பிலும் தூள் கிளப்பி வரும் நிலையில் அவரைத் தொடர்ந்து அவரின் தங்கை பவானி ஸ்ரீயும் இப்பொழுது திரைப்படங்களில் நடித்து கலக்கி வருகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷின் அசுர நடிப்பில் வெளியான க.பெ.ரணசிங்கம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்க அதில் பவானி ஸ்ரீ விஜய் சேதுபதியின் தங்கை வேடத்தில் நடித்து அனைவரையும் அசர வைத்திருப்பார்.

இந்த நிலையில் விரைவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ள பவானி ஸ்ரீயின் சிறுவயது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதை அடுத்து அனைவரையும் கவர்ந்துள்ளது.

நடிப்புக்கு வந்து

நடிப்புக்கு வந்து

காலம் காலமாக நட்சத்திரங்களின் வாரிசுகள் அடுத்தடுத்து திரைப்படங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில் அந்த வரிசையில் ஏ.ஆர்.ரகுமான், ஜி வி பிரகாஷ் குடும்பத்தில் இருந்து பவானி ஸ்ரீயும் இப்பொழுது நடிப்புக்கு வந்து விட்டார்.

ஹீரோவாகவும் நடித்து

ஹீரோவாகவும் நடித்து

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக வெற்றி வலம் வந்து கொண்டிருக்கும் ஜி வி பிரகாஷ் குமார் தனது மயங்க வைக்கும் இசையால் உலக அளவில் பல கோடி ரசிகர்களை கொண்டிருக்கும் நிலையில், இப்பொழுது ஹீரோவாகவும் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்து கலக்கி வருகிறார்.

விஜய் சேதுபதிக்கு தங்கையாக

விஜய் சேதுபதிக்கு தங்கையாக

ஜி வி பிரகாஷை தொடர்ந்து அவரது தங்கை பவானி ஸ்ரீயும் இப்பொழுது திரைப் படங்களில் நடிக்க தொடங்கியுள்ள நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் அசுரத்தனமான நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற க.பெ.ரணசிங்கம் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்தார்.

கண்ணீரை வரவழைத்திருப்பார்

கண்ணீரை வரவழைத்திருப்பார்

நடித்த முதல் திரைப்படத்திலேயே அனைவரையும் அசர வைத்திருந்த பவானி ஸ்ரீ, இதில் வரும் காட்சிகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்திருப்பார்.

பாவக்கதைகள் வெப் சீரிஸில்

பாவக்கதைகள் வெப் சீரிஸில்

இவ்வாறு முதல் திரைப்படம் என்ற எந்த ஒரு சாயலும் இல்லாமல் நடிப்பில் அசத்தியிருந்த பவானி ஸ்ரீ, இப்பொழுது "நண்பன் ஒருவன் வந்த பிறகு" திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வர, வரும் வாரத்தில் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் பாவக்கதைகள் வெப் சீரிஸில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.

சிறுவயது புகைப்படம்

சிறுவயது புகைப்படம்

நடிப்பில் அண்ணனை மிஞ்சிக் கொண்டிருக்கும் பவானி ஸ்ரீ அவ்வப்போது கொஞ்சம் கவர்ச்சி காட்டி போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்று வரும் நிலையில், இப்பொழுது யாரும் கண்டிராத தந்தையுடன் இருக்கும் அரிய சிறுவயது க்யூட் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

தந்தையின் கையில்

தந்தையின் கையில்

அதில் தந்தை கையில் தூக்கி வைத்துக் கொண்டிருக்க பவானி கேமராவை பார்க்காமல் கீழே எதையோ பார்த்துக் கொண்டிருக்கின்ற இதுவரை யாரும் கண்டிராத இந்த க்யூட் புகைப்படம் பார்க்கும் அனைவரையும் வாவ் என சொல்ல வைத்துள்ளது.

More from Filmibeat

Read more about: childhood photos படம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X