புலி மார்னிங், புலி ஈவினிங்: இந்த நாள் ஜி.வி. பிரகாஷுக்கு புலி நாள்
சென்னை: புலியுடன் சேர்ந்து புகைப்படம், வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார் ஜி.வி. பிரகாஷ் குமார்.
இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் படங்களுக்கு இணையாக சமூக சேவை செய்வதற்காகவும் பேசப்படுகிறார். ட்விட்டரில் அவர் தனது படங்களை பற்றி மட்டும் பேசுவது இல்லை.
சமூக பிரச்சனைகள் குறித்தும் ட்வீட் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் இன்று புலியுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
வீடியோ
புலிக்கு மிக அருகில் நின்று செல்ஃபி வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார் ஜி.வி. பிரகாஷ் குமார். அவர் வீடியோ எடுக்க புலி அதுபாட்டுக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது.
புலி மார்னிங்
புலி மீது சாய்ந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தான் இன்று ஜி.வி. பிரகாஷ் குட் மார்னிங்கே கூறினார். புலி மார்னிங் பாஸ்.
மாலை
காலை மட்டும் அல்ல மாலை வணக்கமும் புலியுடன் தான். இந்த நாள் ஜி.வி.க்கு புலி நாள்.

ஜாக்கிரதை
ஜி.வி. பிரகாஷ் வெளியிட்ட புகைப்படங்கள், வீடியோக்களை பார்த்த ரசிகர்கள் அவை மாஸாக இருந்தாலும் ஜாக்கிரதையாக இருக்குமாறு எச்சரித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











