ஜப்பானில் ஸ்ரீதிவ்யாவுடன் டூயட் பாடும் ஜி.வி. பிரகாஷ்

By Siva

சென்னை: ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் பென்சில் படக்குழு பாடல்களை படமாக்க ஜப்பான் கிளம்பிச் சென்றுள்ளது.

இசையமைப்பாளராக கோலிவுட்டில் அறிமுகமான ஜி.வி. பிரகாஷ் பென்சில் படம் மூலம் ஹீரோவானார். அவருக்கு ஜோடியாக ஊதா கலரு ரிப்பன் ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். படப்பிடிப்பு நன்றாக சென்று கொண்டிருந்தது.

புதுமுக இயக்குனர் மணி நாகராஜ் இயக்கும் இந்த படத்திற்கு நிதி பிரச்சனை ஏற்பட்டது.

டார்லிங்

டார்லிங்

பென்சில் படப்பிடிப்புக்கு பிரச்சனை ஏற்பட்ட நிலையில் ஜி.வி. பிரகாஷ் டார்லிங் படத்தில் நடித்து முடித்துவிட்டார்.

ஜப்பான்

ஜப்பான்

பென்சில் படத்தில் வரும் 2 பாடல்களை படமாக்க படக்குழுவினர் ஞாயிற்றுக்கிழமை ஜப்பான் கிளம்பிச் சென்றனர்.

டோக்கியோ

டோக்கியோ

டோக்கியோ நகரில் ஒரு டூயட் மற்றும் ஒரு பாடலை படமாக்க உள்ளனர். ஜப்பானை இதுவரை யாரும் காண்பிக்காத வகையில் படத்தில் காண்பிக்க விரும்புவதாக நாகராஜ் தெரிவித்துள்ளார்.

டிசம்பர்

டிசம்பர்

பென்சில் படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துவிட்டது. இந்நிலையில் படத்தை வரும் டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக நாகராஜ் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X