தரமான படம்… ஜிவி பிரகாஷ்தான் மாஸ்… ‘செல்ஃபி‘ பப்ளிக் ரிவ்யூ!
சென்னை : ஜிவி பிரகாஷ் பிரகாஷ் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள செல்ஃபி திரைப்படம் குறித்து பொது மக்கள் என்ன சொல்லி இருங்காங்கனு பார்க்கலாமா ?
Recommended Video
செல்ஃபி படத்தில் ஜி.வி.பிரகாஷ் அவருக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ மேனன், வித்யா பிரதீப், வேங்கை சந்திரசேகர், சங்கிலி முருகன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
வெற்றிமாறன் உதவியாளர் மதிமாறன் இயக்கி உள்ள, இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தமிழகத்தில் வெளியிடுகிறார்.

செல்ஃபி
கல்வி நிறுவன மோசடிகள், கல்லூரி வளாக அரசியல் குறித்து நிறைய படங்கள் வந்திருக்கிறது. ஆனால் செல்ஃபி திரைப்படம் கல்வி மாஃபியா கதையாக உள்ளது. கல்லூரியில் நடிக்கும் மோசடிகள், மாணவர்களின் தற்கொலைகள், கொலைகள் மற்றும் அநியாயமான கல்லூரி கட்டணம் ஆகியவற்றை அம்பலப்படுத்தி உள்ளது செல்ஃபி.

தரமான நடிப்பு
ஜிவி பிரகாஷ் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக பொதுமக்கள் கருத்துக் கூறியுள்ளனர். கல்லூரியில் சீட்டிற்காக நடத்தப்படும் பேரம், அரசியல்வாதிகளின் தலையீடு என படம் முழுக்க நல்ல மெசேஜ் உள்ளது. குறிப்பாக ஜிவியின் நடிப்பும் கௌதம் மேனின் நடிப்பும் தரமாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

சூப்பரான இயக்கம்
வெற்றிமாறனின் உதவி இயக்குநர் மதிமாறனின் இயக்கம் சூப்பராக உள்ளது. கல்லூரிகளில் நடக்கும் மோசடி, பேரம் குறித்து இதுவரை எந்த திரைப்படத்திலும் சொன்னது இல்லை இந்த படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் மோசடி குறித்து அப்பட்டமாக கூறியுள்ளார் மதிமாறன். வெற்றிமாறனின் உதவியாளர் என்பதை நிரூபித்து உள்ளார் என்று பாராட்டினார்கள்.

கொளதம் மேனன் சூப்பர்
மருத்துவக்கல்லூரி மாணவர்கள், இன்ஜினியரின் கல்லூரி மாணவர்கள் குடும்பத்தோடு சேர்ந்து பார்க்க வேண்டிய படம். ஆரம்பம் முதல் இறுதிவரை எந்த இடத்திலும் லேக் இல்லாமல் படம் விறுவிறுப்பாக உள்ளது. கெளதம் மேனன் இயக்குநராக மட்டும் இல்லை வில்லனாகவும் மிரட்டிஉள்ளார். ஜிவி பிரகாஷின் இசையிலும் அதிரிபுதிரி செய்துள்ளதாக பொது மக்கள் படத்தை புகழ்ந்து தள்ளினர்.


Click it and Unblock the Notifications











