"இடிமுழக்கம்" டப்பிங் பணிகளை தொடங்கிய ஜிவி பிரகாஷ்!
சென்னை : நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் இப்பொழுது இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் இடி முழக்கம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நர்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
கிராமத்து கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்ற நிலையில் இப்போது டப்பிங் பணிகளை ஜிவி பிரகாஷ் தொடங்கியுள்ளார்.

இடி முழக்கம்
கிராமத்து மண் வாசனையுடன் திரைப்படங்களை இயக்கி அதில் வெற்றியும் கண்டு வரும் இயக்குனர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நான்காவது முறையாக இணைந்துள்ள மாமனிதன் திரைப்படம் மிக விரைவில் ரிலீஸாக உள்ளது. படத்தைத் தொடர்ந்து தற்போது இடி முழக்கம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

காயத்ரி நர்ஸ் கதாபாத்திரத்தில்
இசை அசுரனாகவும் மிகச் சிறந்த நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் ஜீவி பிரகாஷ்குமார் இடிமுழக்கம் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. இதில் ஜிவி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடிகை காயத்ரி சங்கர் நர்ஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆக்ஷன் த்ரில்லர் படமாக
குறுகிய காலகட்டத்தில் நடைபெற்று முடிந்த இப்படத்தின் டப்பிங் பணிகளை இப்பொழுது ஜிவி பிரகாஷ்குமார் தொடங்கியுள்ளார். இப்படத்தை ஸ்கைமேன் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் கலைமகன் முபாரக் தயாரிக்கிறார். வழக்கமான கிராமத்து கதை போல் அல்லாமல் ஆக்ஷன் த்ரில்லர் படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார் சீனு ராமசாமி.
Recommended Video

டப்பிங் பணிகள் தொடங்கியது
முதற்கட்டமாக தேனியில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது டப்பிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஜிவி பிரகாஷ் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார் உடன் சீனுராமசாமி இருக்க டப்பிங் ஸ்டுடியோவில் இருந்து புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











