ரிங் டோனை மாற்றும் நேரம் வந்துவிட்டது.. அஜித் ரசிகர்களுக்கு ஜிவி பிரகாஷ் சொன்ன தரமான செய்தி

சென்னை: மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் தனது பணிகளை நிறைவு செய்துவிட்டார் அஜித்குமார். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடித்துவருகிறார் அவர். இந்தப் படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துவருகிறார். முதலில் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பதாக இருந்த சூழலில் அவருக்கு பதிலாக ஜிவி பிரகாஷ் உள்ளே வந்தார். இந்தச் சூழலில் அவர் கூறியிருக்கும் விஷயம் அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

துணிவு படத்துக்கு பிறகு அஜித்குமார் விடாமுயற்சி படத்தில் கமிட்டானார். அந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்க; லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த வருடம் படத்தின் அறிவிப்பு வெளியாகி ஷூட்டிங்கும் தொடங்கியது. ஆனால் படத்தின் ஷூடிங்கோ ஆமை வேகத்தில் நடைபெற்றது. முக்கியமாக ஒளிப்பதிவாளர் மாற்றம்; ஆர்ட் டைரக்டர் மிலன் மரணம் என படம் பற்றிய நெகட்டிவ் தகவல்களே வெளியாகிக்கொண்டிருந்தன. இதனால் விடாமுயற்சி அவ்வளவுதானோ என்று ரசிகர்கள் கவலையடைந்தனர்.

ajith good bad ugly gv prakash

செம அப்டேட்: ஆனால் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது. சூழல் இப்படி இருக்க சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. அதேசமயம் மகிழ் திருமேனியின் மேக்கிங் அருமையாக இருந்தது என்று ஏகே ரசிகர்கள் கூறினர். சூழல் இப்படி இருக்க இந்தப் படம் பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்றும்; அதற்காக 150 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகவும் ஒரு தகவல் வெளியானது.

டப்பிங்கை முடித்த அஜித்: இருந்தாலும் படம் வெளியாவதில் எந்த சிக்கலும் என்றே தெரிகிறது. சமீபத்தில்தான் அஜித்குமார் விடாமுயற்சி படத்தில் தனக்கான டப்பிங்கை முடித்தார். அதுதொடர்பான புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. அதில் அஜித் படு ஸ்லிம்மாக காட்சியளித்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் கமிட்டானார். அந்தப் படத்தை புஷ்பா பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கொஞ்ச நாள்தான் ஷூட்டிங்: படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத், ஸ்பெயின் உள்ளிட்ட இடங்களில் நடந்தது. அஜித்தும் கலந்துகொண்டு மும்முரமாக நடித்தார். அவர் தனக்கான ஷூட்டிங்கை முடித்துவிட்டதாக தெரிகிறது. மேலும் இன்னும் சில நாட்களுக்கான ஷூட்டிங் மட்டுமே இருப்பதாகவும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அறிவித்தது. இதற்கிடையே இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் முதலில் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவருக்கு பதிலாக ஜிவி பிரகாஷ் புக் செய்யப்பட்டார்.

ஜிவி பிரகாஷ் சொன்ன செய்தி: தேவிஸ்ரீ பிரசாத் படத்திலிருந்து நீக்கப்பட்டதற்கு மொத்தம் இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதாவது கங்குவா சந்தித்த விமர்சனமும், மைத்ரி நிறுவனத்துடன் அவருக்கு இருக்கும் மனஸ்தாபம்தான் காரணங்கள் என்று கூறப்படுகின்றன. இந்நிலையில் குட் பேட் அக்லி இசை பற்றி ஜிவி பிரகாஷ் கூறியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் கூறுகையில், 'கரியர் பெஸ்ட் வந்துகொண்டிருக்கிறது. ரசிகர்கள் ரிங் டோனை மாற்றும் நேரம் வந்துவிட்டது. ஆயிரத்தில் ஒருவனில் இடம்பெற்ற லைஃப் ஆஃப் செலிபிரேஷன் இசைக்கு நடனம் அமைத்தால் எப்படி இருக்கும். செமயாக இருக்கும்ல" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X