பிரேக் அப்க்கு இதுதாங்க காரணம்.. செம ஸ்மார்ட்டாக பேசிய ஜிவி பிரகாஷ்.. ட்ரெண்டாகும் வீடியோ

சென்னை: ஜிவி பிரகாஷ் கடந்த 2013ஆம் ஆண்டு தனது காதலி சைந்தவியை திருமணம் செய்துகொண்டார். கிட்டத்தட்ட 11 வருடங்கள் அவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருந்தது. அவர்களுக்கு அன்வி என்ற மகளும் இருக்கிறார். நிலைமை இப்படி இருக்க இப்போது அவர்கள் இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்திருக்கின்றனர். இது திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும் உச்சக்கட்ட அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இந்தச் சூழலில் ஜிவி பிரகாஷ் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜிவி பிரகாஷ். ஏராளமான படங்களுக்கு தனது சிறந்த இசையை கொடுத்திருக்கும் அவர் சூரரைப் போற்று படத்துக்காக தேசிய விருதையும் தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது. இப்போது நடிகராகவும் கலக்கிவரும் அவர் கடைசியாக கள்வன், டியர் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களுமே போதுமான வரவேற்பை பெறவில்லை. எனவே எப்படியாவது ஒரு சிறந்த வெற்றியை கொடுத்துவிட வேண்டும் என்பதில் முனைப்போடு இருக்கிறார்.

GV Prakash Talks about Break Up That Old Video Goes Trend on Social Media

விவாகரத்து: இதற்கிடையே தனது பள்ளி கால தோழியான சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஜிவி பிரகாஷ். பிரகாஷோடு சைந்தவி இரண்டு வருடங்கள் இளையவர். இவர்கள் இருவருக்குமான காதலுக்கு இசை முக்கிய பங்காற்றியது. அதேபோல் சைந்தவியும் சினிமாவில் பின்னணி பாடகியாக இருந்துவருகிறார். அவரும் ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார். இவர்களுக்கு அன்வி என்ற மகளும் இருக்கிறார். கடந்த 2020ஆம் ஆண்டுதான் அன்வி பிறந்தார். இப்போது இவர்கள் இருவரும் விவாகரத்து செய்துகொள்வதாக அறிவித்திருக்கிறார்கள்.

ஜிவி பிரகாஷ் ட்வீட்: இதுகுறித்து ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “திருமணம் ஆகி 11 ஆண்டுகள் முடிந்திருக்கும் நிலையில் நானும் சைந்தவியும் பிரிந்து வாழ்வதற்கு முடிவு செய்திருக்கிறோம். எங்களுடைய ப்ரைவேசிக்கு ஊடக நண்பர்கள், ரசிகர்கள் மதிப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த மாதிரியான கடினமான தருணத்தில் உங்களுடைய புரிதலும், ஆதரவும் எங்களுக்கு ஆறுதல் தரும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சைந்தவி பதிவு: அதேபோல் சைந்தவி தனது சமூக வலைதள பக்கத்தில், "11 வருடங்களுக்கு பிறகு நானும் ஜிவி பிரகாஷும் திருமண உறவிலிருந்து வெளியேறுவதாக முடிவெடுத்திருக்கிறோம். எங்கள் மன அமைதிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் இந்த முடிவை நாங்க இருவருமே இணைந்து எடுத்திருக்கிறோம். இதுதான் எங்களுக்கு சிறந்த முடிவாக இருக்கும். இந்த நேரத்தில் உங்களின் ஆறுதலுக்கும் புரிந்தலுக்கும் நன்றி. எங்களது முடிவுக்கு மதிப்பளிக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

ட்ரெண்டாகும் பேட்டி: இந்தச் சூழலில் ஜிவி பிரகாஷ் பேசிய பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்த வீடியோவில் அவர், "காதலில் பிரேக் அப் நடப்பதற்கு காரணம் என்ன தெரியுமா?.. இரண்டு பேர் வாழ்க்கையில் வேறு ஒருவர் வந்து அறிவுரை சொல்வது, அவர்களிடம் ஐடியா கேட்பதுதான். இதனை முதலில் நிறுத்தினால் இந்த பிரேக் அப் ஆகாது. ஏன் என்றால் எல்லோரும் அவர்களுடைய வாழ்க்கையையும், அவர்கள் மேல் இருக்கும் தவறுகளையும் இவர்கள் மீது திணிக்க முயற்சி செய்வார்கள். அப்போ என்ன ஆகும். இல்லாத பிரச்னை எல்லாம் உருவாகும். அதனால் தங்களது வாழ்க்கையை சம்பந்தப்பட்ட இரண்டு பேர் முடிவு செய்து வாழ்ந்தால் பிரேக் அப் நடக்காது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X