விவாகரத்துக்கு பின்னும் அப்படி ஏன்?.. சைந்தவி பற்றி மனம் திறந்த ஜிவி பிரகாஷ்

சென்னை: பாடகி சைந்தவியும், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். தங்களது பள்ளி காலத்திலிருந்தே இருவரும் காதலித்துவந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு அன்வி என்ற மகள் இருக்கும் சூழலில் கடந்த வருடம் தாங்கள் பிரிவதாக அறிவித்து ஷாக் கொடுத்தார்கள். பிரிவுக்கு பிறகும் இசை கச்சேரிகளில் இருவரும் சேர்ந்து பணியாற்றுகிறார்கள். இந்தச் சூழலில் அதுகுறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் ஜிவி பிரகாஷ்.

ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவுக்குள் வந்த் ஜிவி பிரகாஷ் தான் இசையமைத்த முதல் படமான வெயில் படத்திலேயே அநத அடையாளத்தை மாற்றி தனக்கென தனி அடையாளத்தை பெற்றுக்கொண்டார். அந்தப் படத்தில் ஜிவியின் இசையை கேட்ட பலரும் ஆச்சரியத்தின் உச்சத்துக்கு சென்றார்கள். கண்டிப்பாக இவருக்கென பெரும் இடம் காத்திருக்கிறது என்று ஆரூடமும் கூறினார்கள். அந்த ஆரூடத்தின்படியே தனக்கென ஒரு இடத்தையும் பிடித்துக்கொண்டார்.

gv prakash saindhavi

செம இசை: ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோரிடம் எல்லாம் பணியாற்றியிருந்த ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக அட்டகாசமான இசையை தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருந்தார். பரதேசி, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், தலைவா, தெறி, கிரீடம், அங்காடித் தெரு என வரிசையாக ஹிட் பாடல்களை கொடுத்தார். சூழல் இப்படி இருக்க அவருக்கு நடிக்கும் ஆசை வந்தது. அதனையடுத்து நடிகராக அவதாரம் எடுத்த ஜிவிக்கு சில படங்கள் தவிர்த்து பெரிதாக எந்த ஹிட் படங்களும் வரவில்லை.

மீண்டும் இசையமைத்த ஜிவி: அவர் நடிகராக மாறினாலும் இசையமைப்பதை விட்டுவிடக்கூடாது என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து கூறினார்கள். அதன்படி அவர் மீண்டும் இசையமைக்க வந்திருக்கிறார். கடைசியாக அவர் இசையமைத்த வணங்கான், லக்கி பாஸ்கர், அமரன் படங்களும் நல்ல வரவேற்பையே பெற்றன. அடுத்ததாக அஜித்குமார் நடித்திருக்கும் குட் பேட் அக்லி படத்துக்கும் அவர்தான் இசை என்று கூறப்படுகிறது. மேலும் சூரரைப் போற்று படத்துக்காக தேசிய விருதையும் பிரகாஷ் வாங்கியிருந்தார்.

மனைவியுடன் பிரிவு: இதற்கிடையே பள்ளி காலத்திலிருந்தே சைந்தவியை காதலித்த ஜிவி பிரகாஷ் அவரை திருமணமும் செய்துகொண்டார். அவர்களுக்கு அன்வி என்ற மகள் இருக்கிறார். சைந்தவியும் பிரபலமான பின்னணி பாடகி என்பது அனைவரும் அறிந்ததேன். இரண்டு பேரும் ஃபேவரைட் ஜோடியாக வலம் வந்துகொண்டிருந்த சூழலில்; தாங்கள் பிரிந்து வாழப்போவதாக கடந்த வருடம் அறிவித்தார்கள். அது ஒட்டுமொத்த கோலிவுட்டையும் உச்சக்கட்ட அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

ஜிவி பிரகாஷ் பேட்டி: இரண்டு பேரும் பிரிந்தாலும் ஜிவி நடத்திய இசை கச்சேரியில் கலந்துகொண்டு சைந்தவி பாடல் பாடினார். இந்நிலையில் இதுகுறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் ஜிவி பிரகாஷ். அவர் பேசுகையில், "நாங்கள் ரொம்பவே ப்ரொபொஷனலாக இருக்கிறோம். அதுமட்டுமின்றி ஒருவர் மீது ஒருவர் நல்ல மரியாதையையும் வைத்திருக்கிறோம். அந்த மரியாதை காரணமாகத்தான் பிரிவுக்கு பிறகும் நாங்கள் ஒன்றாக சேர்ந்து பணியாற்றுகிறோம்"" என்றார். அவரது இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X