தனுஷுடன் சண்டை.. 6 வருடங்கள் பேச்சுவார்த்தை இல்லை.. மனம் திறந்த ஜிவி பிரகாஷ்.. வெளியான டாப் சீக்ரெட்
சென்னை: இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் அக்கா மகன் ஜிவி பிரகாஷ். ஆரம்பத்தில் இப்படி அவர் அடையாளப்பட்டாலும் தற்போது சிறந்த இசையமைப்பாளர், நல்ல நடிகர் என்ற அடையாளத்தோடு இருக்கிறார். அவரது பாடல்கள் பலரது ஃபேவரைட்டாக திகழ்ந்துகொண்டிருக்கின்றன. அவரது நடிப்பில் உருவாகியிருக்கும் கள்வன் திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. இந்தச் சூழலில் தனக்கும் தனுஷுக்கும் இடையே இருக்கும் உறவு குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார் ஜிவி பிரகாஷ்.
வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி. பிரகாஷ். 17 வயதில் அந்த படத்துக்கு அவர் இசையமைத்தார். வெயில் படம் வெயிட்டேஜான கதை என்பதால் அந்தப் படத்தில் ஜிவி பிரகாஷின் இசையை கேட்ட ஒட்டுமொத்த திரையுலகமும், இந்த சிறிய வயதில் இப்படிப்பட்ட ஒரு படத்துக்கு சிறப்பாக இசையமைக்க தனித்திறமை வேண்டும் என அவரை உச்சி முகர்ந்து கொண்டாடியது.

முன்னணி இசையமைப்பாளர்: வெயில் படம் கொடுத்த வெற்றியால் ஜிவி பிரகாஷுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அந்தவகையில் ரஜினி நடித்த குசேலன் படத்திற்கு இசையமைத்ததன் மூலம் மேற்கொண்டு அடையாளப்பட்டார். இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் அக்கா மகன் என்று குறிப்பிடத்தக்கது. ஆனாலும், அந்த பிரபல்யத்தை விட ஜிவி பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர் என்ற பிரபல்யம் அவரிடன் விரைவிலேயே வந்து சேர்ந்தது.
தேசிய விருது: செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு ஜிவி பிரகாஷ் அமைத்திருந்த இசை உச்சக்கட்ட க்ளாசிக். அதற்காக அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் கிடைக்கவில்லை. இது பலரையும் அதிருப்தியடைய செய்தது. தொடர்ந்து இசையமைத்து வந்த அவருக்கு சூரரைப் போற்று திரைப்படத்துக்காக தேசிய விருது கிடைத்தது. ஒருவழியாக பல வருடங்களுக்கு பிறகு ஜிவி பிரகாஷுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துவிட்டதாக ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
நடிப்பில் கவனம்: இதற்கிடையே அவர் நடிப்பிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அந்த வகையில் த்ரிஷா இல்லனா நயன் தாரா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஜிவி பிரகாஷ் தொடர்ந்து பென்சில், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, நாச்சியார் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவர் நடித்த படங்களிலேயே முக்கியமான படங்களாக அமைந்தது, ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவான சர்வம் தாளமயம், சசி இயக்கத்தில் உருவான சிவப்பு மஞ்சள் பச்சை, பாலா இயக்கத்தில் உருவான நாச்சியார் ஆகிய படங்கள். இந்த மூன்று படங்களிலும் அவரது நடிப்பு நன்றாகவே மெருகேறியிருந்தது.
கள்வன்: அவரது நடிப்பில் இன்று கள்வன் திரைப்படம் வெளியாகியிருக்கிறது. அவருக்கு ஜோடியாக இவானா நடித்திருக்கிறார். மேலும் இயக்குநர் இமயம் பாரதிராஜா, விஜய் டிவி புகழ் தீனா உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். படத்துக்கு ரசிகர்கள் தங்களது சுமாரான வரவேற்பையே கொடுத்திருக்கின்றனர். இதன் காரணமாக இந்தப் படம் ஜிவிபியின் சூப்பர் ஹிட் லிஸ்ட்டில் சேரவில்லை. இந்தச் சூழலில் தனக்கும் தனுஷுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசினார் அவர்.
என்ன சண்டை: இதுகுறித்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், "இரண்டு நண்பர்கள் இருக்கும்போது சண்டை வருவது எல்லாம் சகஜமான விஷயம்தான். அப்படித்தான் எனக்கும், தனுஷுக்கும் பிரச்னை வந்தது. இதனால் நாங்கள் இரண்டு பேரும் ஆறு வருடங்கள் பேசிக்கொள்ளாமல் இருந்தோம். இப்போது எல்லா பிரச்னைகளையும் சரி செய்தாயிற்று. நாங்கள் இப்போது நல்ல நண்பர்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











