National Awards - 2வது முறை தேசிய விருது.. நன்றி சொன்ன ஜிவி பிரகாஷ்.. யாருக்கு தெரியுமா?

சென்னை: 2023ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தமிழை பொறுத்தவை பார்க்கிங் திரைப்படம் மொத்தம் மூன்று தேசிய விருதுகளை அள்ளியிருக்கிறது. வாத்தி படத்துக்கு இசையமைத்தற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை ஜிவி பிரகாஷ் பெற்றிருக்கிறார். அவருக்கு இது இரண்டாவது தேசிய விருது ஆகும். இந்நிலையில் தனுஷுக்கு நன்றி சொல்லியிருக்கிறார் ஜிவி.

வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிவி பிரகாஷ் குறுகிய காலத்திலேயே முன்னணி இசையமைப்பாளர் என்ற இடத்தை பிடித்துவிட்டார். ரஹ்மானின் ஆல்பங்கள் எப்படி ரிலீஸாகி சில நாட்களில் நம்மை ஈர்க்குமோ அதே பாணியில்தான் ஜிவி பிரகாஷின் இசை. அவர் இசையமைத்த பாடல்கள் பல வெளியாகி கொஞ்ச நாட்களில் ஹிட்டாகி; ரிப்பீட் மோடில் ஓடிக்கொண்டிருப்பவை.

தேசிய விருது: அவர் எவ்வளவு கடுமையாக, சிறப்பாக உழைத்தாலும் அவருக்கு தேசிய விருது கிடைக்காமல் இருந்தது. அதனை வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த அசுரன் திரைப்படம் தீர்த்து வைத்தது. சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை அப்படத்துக்காக முதன்முறையாக் பெற்றார் ஜிவி. அவர் தேசிய விருது வென்றது அவருக்கு மட்டுமின்றி பலருக்கும் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

GV Prakash thanks actor Dhanush for winning National Award
Photo Credit:

2வது தேசிய விருது: இந்நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தமிழை பொறுத்தவை சிறந்த படமாக பார்க்கிங் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் அப்படத்தின் திரைக்கதைக்காக அதன் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனும், சிறந்த துணை நடிகராக எம்.எஸ்.பாஸ்கரும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஜிவி பிரகாஷுக்கு வாத்தி படத்துக்கு இசையமைத்ததால் 2வது முறையாக தேசிய விருது கிடைத்திருக்கிறது.

நன்றி சொன்ன ஜிவி பிரகாஷ்: இந்நிலையில் தேசிய விருது கிடைத்தது குறித்து ஜிவி பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில், "2வது முறையாக ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வென்றதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். தேசிய விருது பயணத்துக்காக வாத்தி படக்குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

தனுஷுக்கு நன்றி: வாத்தி படத்தில் என்னை கமிட் செய்ததற்காக சகோதரர் தனுஷுக்கு நன்றி. பொல்லாதவன், அசுரன், வாத்தி, இட்லி கடை என எங்களின் தொடர்ச்சியான பயணம் பலனளித்துவருகிறது. என்னுடைஅய் சிறந்த படைப்பை வழங்குவதற்கு என்னை ஊக்கப்படுத்திய இயக்குநர் வெங்கி அட்லூரிக்கும் நன்றி. தயாரிப்பாளர்கள் நாகவம்சி, திரிவிக்ரமுக்கும் நன்றி. அதேபோல் என்னுடைய குடும்பத்தினர், இசை கலைஞர்கள், பாடலாசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநந்ர்கள், அன்பு நண்பர்கள், என்னை ஆதரித்து நம்பிய எனது ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. பிரபஞ்சத்துக்கும் நன்றி" என குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X