இயக்குனர் வசந்தபாலனுடன் மீண்டும் கைகோர்க்கும் ஜி.வி!
சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான தேசிய விருது பெற்ற இயக்குனர் வசந்தபாலன்.
தற்போது தனது பள்ளி நண்பர்களுடன் இணைந்து அடுத்த படத்தை தயாரித்து இயக்கவுள்ளார்.
இந்த படத்தில் ஜீ.வி. பிரகாஷ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து நாயகனாக
கைதி படத்தில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் மாஸ்டர் படத்திலும் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆதரவை பெற்றார் அர்ஜுன் தாஸ். இதற்கிடையில் அந்தகாரம் படத்தில் நாயகனாக நடித்தார், அதை தொடர்ந்து வசந்தபாலனின் அடுத்த படத்தில் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார் அர்ஜுன் தாஸ்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இந்த படத்தில் நாயகியாக துஷாரா விஜயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துஷாரா ஏற்கனவே "போதை ஏறி புத்தி மாறி" படத்தில் நடித்துள்ளார், அதையடுத்து "சல்பேட்டா பரம்பரை" படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக துஷாரா நடிக்கவுள்ளதை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

வெற்றி கூட்டணி
இதைத்தொடர்ந்து இந்த படத்தில் ஜீ.வி. பிரகாஷ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
வெயில், அங்காடி தெரு, ஜெயில்(இன்னும் வெளிவரவில்லை) ஆகிய படங்களை தொடர்ந்து இந்த கூட்டனி 4ம் முறையாக இந்த படத்தில் இணைகிறது.

இயக்குனர் ட்வீட்
"16 வயதில் ஜீவியின் கையைப் பிடித்து வெயில் படத்திற்கு இசையமைக்க அழைத்து வந்தேன். இன்று அசுர உழைப்பால் தமிழின் முக்கியமான இசையமைப்பாளராய் , இளம் கதாநாயகனாய் எழுந்து நிற்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க இசைந்த ஜீவியின் அன்புக்கு ஆயிரம் பூங்கொத்து" என படத்தின் இயக்குனர் ட்வீட் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











