செம போல்டான படம்.. திவ்யபாரதியுடன் அந்த சீன்.. 45 டேக் ஆச்சு.. ஜி.வி. பிரகாஷ் த்ரோபேக் பேட்டி!
சென்னை: சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான 'பேச்சுலர்' படம் கடைசியாக ஜி.வி. பிரகாஷுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக திவ்யபாரதி நடித்திருந்தார். அதற்கு முன்பு வரை சமத்துப் பையனாக நடித்து வந்த ஜி.வி. பிரகாஷ் அந்த படத்தில் ரொம்பவே போல்டான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
பேச்சுலர் படத்தின் டீசரில் வெளியான அந்த ஒரு வசனம் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. "நீ எங்க லவ் பண்ணப் போற.. நான் தான் உஷாரா இருந்துருக்கணும் என திவ்யபாரதி பேசியிருப்பார்.

ஆனால், அந்த காட்சியில் கூட அதிக டேக்குகள் எடுக்காத அவர் இன்னொரு சீனுக்கு 45 டேக்குகள் எடுத்ததாக ஜி.வி. பிரகாஷ் அளித்த த்ரோபேக் பேட்டியை ரசிகர்கள் தற்போது இணையத்தில் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
முதல் படத்திலேயே போல்டாக: விளம்பரங்களில் மாடலாக நடித்து வந்த தனக்கு பேச்சுலர் படத்தின் வாய்ப்பு தான் நடித்த ஒரு சேலை விளம்பரத்தை பார்த்து விட்டு கிடைத்ததாக திவ்யபாரதி தெரிவித்துள்ளார். முதல் படமே ஏகப்பட்ட ரசிகர்களை அவருக்கு பெற்றுத் தந்தது. கோட் எனும் தெலுங்கு படத்தில் நடித்து வரும் திவ்யபாரதி அடுத்ததாக ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து கிங்ஸ்டன் படத்திலும் நடித்துள்ளார்.
லிப் லாக் காட்சிகள்: டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பேச்சுலர் திரைப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் மற்றும் திவ்யபாரதியின் லிப் லாக் காட்சிகள் மற்றும் படுக்கை அறை காட்சிகள் என படு நெருக்கமான காட்சிகள் பல இடம்பெற்று இருந்தன. கமல் பிரகாஷ் இயக்கத்தில் அடுத்த ஜிவி பிரகாஷ் நடித்துள்ள கிங்ஸ்டன் திரைப்படத்திலும் திவ்யபாரதி நடித்துள்ள நிலையில் பேச்சுலர் படத்தின் கெமிஸ்ட்ரி இந்த படத்திலும் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறதா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
45 டேக்: பேச்சுலர் படத்தின் டீசரில் இடம்பெற்ற "நீ என்ன லவ் பண்றியா?" என திவ்யபாரதி ஜி.வி. பிரகாஷை பார்த்து கேட்க அதற்கு ஆமாம் அல்லது இல்லை என்பது போல தலையாட்டும் காட்சியை பெங்களூரில் உள்ள ஒரு பிஸியான ஸ்ட்ரீட்டில் படமாக்கினோம் என்றும் அந்த காட்சியை படமாக்க அதிகபட்சமாக 45 டேக்குகள் திவ்யபாரதி எடுத்துக் கொண்டார் என்றும் பல போல்டான சீன்களையே அசால்ட்டாக நடித்தவர் இந்த காட்சிக்கு மட்டும் அத்தனை டேக்குகள் ஏன் எடுத்தார் என தெரியவில்லை எனக் கூறியுள்ளார்.

தொடர் தோல்வி: 2021ம் ஆண்டு திவ்யபாரதியுடன் இணைந்து ஜி.வி. பிரகாஷ் நடித்த பேச்சுலர் திரைப்படத்துக்குப் பிறகு அவர் நடித்த ஜெயில், செல்ஃபி, அடியே, ஐங்கரன், ரெபல், கள்வன் மற்றும் டியர் உள்ளிட்ட படங்கள் பெரிதாக போகவில்லை. இளைஞர்களையும் வெகுவாக கவரவில்லை. இந்நிலையில், மீண்டும் திவ்யபாரதியுடன் இணைந்து நடித்துள்ள கிங்ஸ்டன் திரைப்படம் ஜி.வி. பிரகாஷுக்கு வெற்றிப் படமாக அமையுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
விவாகரத்து அறிவிப்பு: ஜி.வி. பிரகாஷ் தனது நீண்ட நாள் காதல் மனைவி சைந்தவியை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்துள்ளார். அதற்கு யாரும் காரணமில்லை என்றும் தங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம் என இருவரும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











