விஜய்க்காக 'வாட்ச்மேன்' ஆன ஜி.வி. பிரகாஷ்

By Siva

சென்னை: ஜி.வி. பிரகாஷ், ஏ.எல். விஜய் இணைந்துள்ள படத்திற்கு வாட்ச்மேன் என்று பெயர் வைத்துள்ளார்களாம்.

பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், தித்யாவை வைத்து ஏ. எல். விஜய் இயக்கிய லக்ஷ்மி படம் கடந்த வாரம் ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தித்யாவின் நடனத் திறமையை பாராட்டாதவர்களே இல்லை எனலாம்.

GV Prakash turns Watchman for AL Vijay

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்க உள்ளார் விஜய். இதற்கிடையே அவர் ஜி.வி. பிரகாஷ் குமாரை வைத்து படம் ஒன்றை இயக்கியுள்ளார்.

விஜய், ஜி.வி. பிரகாஷ் இணைந்துள்ள படத்திற்கு வாட்ச்மேன் என்று பெயர் வைத்துள்ளார்களாம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்று கூறப்படுகிறது.

விஜய் தீயாக வேலை செய்கிறார் என்றே கூற வேண்டும். ஏ.எல். விஜய்யின் படங்களுக்கு இசையமைத்து வந்த ஜி.வி. பிரகாஷ் முதல் முறையாக அவர் இயக்கத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X