குட் பேட் அக்லி Original Sound Track.. ஜிவி பிரகாஷ் வெளியிட்ட முக்கிய அப்டேட்
சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இதற்கு முன்னதாக வெளியான விடாமுயற்சி திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக இப்படத்தின் மீது உச்சபட்ச எதிர்பார்ப்பு இருந்தது. இதில் அஜித்துடன் திரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். படத்துக்கு ஏகே ரசிகர்களிடையே அதீத வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்க கமிட்டானபோது கண்டிப்பாக அப்படம் கோலிவுட்டில் ஒரு பெஞ்ச் மார்க்காக இருக்கும் என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. மாறாக படம் படுதோல்வியை சந்தித்தது. அந்தத் தோல்விக்கு காரணம் அஜித்துக்கு மாஸ் சீன்கள் இல்லாதது என அவரது ரசிகர்கள் சொன்னாலும்; விடாமுயற்சி படத்தின் கதையில் அஜித்தின் தலையீடு அதிகம் இருந்ததுதான் முக்கியமான காரணம் என்று திரைத்துறையினர் சொல்கிறார்கள்.
குட் பேட் அக்லி: அப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்க கமிட்டானார். படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க; முதலில் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பதாக இருந்தார். ஆனால் சில காரணங்களால் அவருக்கு பதிலாக ஜிவி பிரகாஷ் உள்ளே வந்தார். அஜித்தின் தீவிரமான ரசிகர் ஆதிக் என்பதால் இப்படத்தின் மீது திரைத்துறையில் பலருக்கும் ஆர்வம் இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த ஆர்வத்தோடு படம் பார்க்க சென்றார்கள்.

ஏகே ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்: அஜித் ரசிகர்களை பொறுத்தவரை குட் பேட் அக்லி திரைப்படத்தை அதிகமாகவே கொண்டாடினார்கள். விடாமுயற்சியில் ஏகே ரசிகர்கள் சந்தித்த அப்செட்டுக்கு மருந்திடும் வகையில் இப்படத்தில் அஜித்துக்காக ஏகப்பட்ட மாஸ் சீன்களை வைத்திருந்தார் இயக்குநர் ஆதிக். இதன் காரணமாகவே குட் பேட் அக்லி அஜித் ரசிகர்களில் பெரும்பாலானோருக்கு கனெக்ட் ஆகிவிட்டது. தியேட்டர்களில் அவர்கள் கொண்டாடி தீர்த்தார்கள்.
விமர்சனத்தை சந்தித்த படம்: அதேசமயம் பொதுவான ரசிகர்களுக்கு படம் பிடிக்கவில்லை. அவர்கள் ஏகப்பட்ட குறையை சொன்னார்கள். அதிலும் வில்லனுக்கு ஒத்த ரூபா தாரேன் பாடல், தொட்டு தொட்டு பேசும் சுல்தானா, புன்னகை அரசி டயலாக், வாலி இசையை பயன்படுத்தியது என லிஸ்ட் நீண்டு கொண்டே சென்றது. படம் இப்படி விமர்சனத்தை சந்தித்தாலும் அடுத்ததும் அஜித்தை ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கப்போகிறார் என்று கூறப்படுகிறது.
பாடல்கள் சுமார்தான்: இதற்கிடையே குட் பேட் அக்லி திரைப்படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். கிரீடம் படத்துக்கு பிறகு அஜித்துக்கு ஜிவி இசையமைத்திருந்ததால் பாடல்கள், பின்னணி இசையெல்லாம் பட்டையை கிளப்பும் என்று நம்பினார்கள் ரசிகர்கள். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இசையும் இல்லை என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருந்தது. இந்நிலையில் ஜிவி பிரகாஷின் ட்வீட் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
ஜிவியின் ட்வீட்: அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "குட் பேட் அக்லி படத்தின் Original Sound Track விரைவில் வெளியாகவிருக்கிறது. அதற்கான வேலைகள்தான் இப்போதைக்கு போய்க்கொண்டிருக்கின்றன. ரெடியா மாமே" என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











