மார்க் ஆண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர்: விஷால் ரசிகர்கள் வெயிட்டிங்
சென்னை: 'லத்தி' படத்தை தொடர்ந்து விஷால் அவரது 33வது படமான மார்க் ஆண்டனியில் நடித்து வருகிறார்.
Recommended Video
மார்க் ஆண்டனி படத்தில் விஷாலுக்கு வில்லனாக எஸ்ஜே சூர்யா நடித்து வருகிறார்.
அதிக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

வெற்றிக்காக காத்திருக்கும் விஷால்
விஷால் நடிப்பில் கடந்தாண்டு வெளியான எனிமி திரைப்படம், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்தப் படத்தில் விஷாலுடன் ஆர்யா நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்தாண்டு வெளியான 'வீரமே வாகை சூடும்' படமும் கலவையான விமர்சனங்களால், ரசிகர்களை கவர முடியாமல் போனது. இந்நிலையில், அவர் நடித்து வரும் 'லத்தி', 'மார்க் ஆண்டனி' ஆகிய படங்களின் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதில் இந்தமாதம் 12ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த லத்தி, செப்டம்பரில் ரிலீஸாக உள்ளது.

மாஸ் காட்டுமா மார்க் ஆண்டனி?
'லத்தி' படத்தில் விஷால் போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார். அதேபோல், மார்க் ஆண்டனி படத்தில் விஷால் இதுவரை நடித்திடாத வித்தியாசமான ரோலில் நடிப்பதாக செய்வதாக சொல்லப்படுகிறது. மேலும், விஷாலுக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இருவருமே இரட்டை வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த ஆதிக் ரவிச்சந்திரன், 'மார்க் ஆண்டனி' படத்தை இயக்குகிறார்.

கதையை கேட்டு மிரண்ட எஸ்ஜே சூர்யா
விஷாலுக்கு வில்லனாக நடிக்கும் எஸ்ஜே சூர்யா, மார்க் ஆண்டனி படத்தின் கதையை ரொம்பவே பாராட்டியிருந்தார். "இப்படியொரு கதையை கேட்ட பிறகு என்னால் இந்தப் படத்தில் நடிக்காமல் இருக்க முடியாது. இனிமேல் எனக்கு இப்படி ஒரு கேரக்டர் கிடைக்குமா எனத் தெரியவில்லை" எனக் கூறியிருந்தார். எஸ்ஜே சூர்யா இப்படி பேசியிருந்தது 'மார்க் ஆண்டனி' படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. இந்தப் படம் கேங்ஸ்டர் பின்னனியில் உருவாவதாகவும் சொல்லப்படுகிறது.

மார்க் ஆண்டனி ஃபர்ஸ்ட் லுக்
விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்து வரும் மார்க் ஆண்டனி படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசைமைக்கிறார். இந்நிலையில், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து ஜிவி பிரகாஷ் குமார் டிவிட்டரில் அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி, 'மார்க் ஆண்டனி' படத்தின் ஃபர்ஸ் லுக் போஸ்டர் நாளை (ஆக 29) காலை 11.11 மணிக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளார். இந்த திடீர் அறிவிப்பு விஷால் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











