ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி ஜூனில் திருமணம்… அமெரிக்காவில் ஹனிமூன்

By Mayura Akilan

இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி காதல் ஜோடியின் திருமணம் ஜூன் மாதம் சென்னையில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெயில்,கிரீடம் தாண்டவம் என 25 படங்களுக்கு இசை அமைத்துள்ளவர் ஜி.வி.பிரகாஷ்குமார். பத்தாண்டுகளாக காதலித்த பள்ளித் தோழி சைந்தவியை திருமணம் செய்துக்கொள்ளப்போகிறார்.

இருவரும் ஒரே பள்ளியில் இணைந்து படித்தவர்கள். நட்பு காதலாக மலர்ந்து இப்போது திருமணம் வரை வந்துள்ளது. ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படும் இந்த இசை ஜோடியின் காதல் பயணம் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்.

ஏ.ஆர்.ரஹ்மான் தாய்மாமன்

ஏ.ஆர்.ரஹ்மான் தாய்மாமன்

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சொந்த தாய்மாமா என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம். ஜி.பி.பிரகாஷின் அம்மா ஏ.ஆர்.ரஹைனாவும் இசை அமைப்பாளர்தான்.

ஏ.ஆர்.ரஹ்மானிடம் வேலைக்கு சேரும் முன்பு ஹாரிஸ் ஜெயராஜ், பரத்வாஜ், வித்யாசாகர், தீனா ஆகியோரிடம் வேலை பார்த்திருக்கிறார் ஜி.வி. பிரகாஷ்.

பள்ளித் தோழி காதலியான கதை

பள்ளித் தோழி காதலியான கதை

ஜி.வி.பிரகாஷ் உடன் பள்ளியில் படித்த சைந்தவியுடன் பத்து வருட காதல். அவரும் பிரபல பாடகி என்பதுதான் சிறப்பம்சம். ஜி.வி.பி இசையில் பல பாடல்களைப் பாடியுள்ளார் சைந்தவி.

பிரபல இசை காதல் ஜோடி

பிரபல இசை காதல் ஜோடி

இசை அமைப்பாளர் ஏ.எம். ராஜா பாடகி ஜிக்கி காதல் திருமணம் செய்து கொண்டனர். அதே போல ஜி.வி.பி - சைந்தவி ஜோடியும் காதல் ஜோடியாக பிரபலமடைந்துள்ளனர்.

ஹீரோவான ஜி.வி.பி

ஹீரோவான ஜி.வி.பி

இசை அமைப்பாளராக மட்டுமல்லாது படத் தயாரிப்பாளராகவும் ஹீரோவாகவும் பணியை தொடங்கியுள்ள ஜி.வி.பி திருமணம் பற்றி கேட்காத செய்தியாளர்களே இல்லை. இப்போது ஜூன் மாதம் திருமணம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

சென்னையில் திருமணம்

சென்னையில் திருமணம்

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் கல்யாண மண்டபத்தில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்திற்கு தென்னிந்திய திரை பிரபலங்கள் மட்டுமல்லாது பாலிவுட் பிரபலங்களும் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் ஹனிமூன்

அமெரிக்காவில் ஹனிமூன்

திருமணம் முடிந்த கையோடு புதுமணத் தம்பதியர் அமெரிக்காவிற்கு ஹனிமூன் செல்ல இருக்கின்றனர். இப்போது ஜி.வி.பி கையில் அனுராக் காஷ்யப்பின் இந்தி திரைப்படமும், காக்கா முட்டை, ராஜா ராணி,நிமிர்ந்து நில், தலைவா ஆகிய படங்கள் உள்ளன திருமணத்திற்கு முன்பு அவற்றை முடித்துக் கொடுக்கும் பணியில் தீவிரமாக உள்ளார் ஜி.வி.பி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X