twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நியாயமான தண்டனை.. தவறு செய்பவர்களுக்கு எச்சரிக்கை மணி.. என்கவுன்டரை வரவேற்கும் ஜீவி பிரகாஷ்!

    |

    சென்னை: ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளிகள் என்கவுன்டரில் கொல்லப்பட்டது தவறு செய்யும் நபர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி என நடிகரும் இசையமைப்பாளருமான ஜீவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

    கடந்த 27 ஆம் தேதி ஹைதராபாத்தை சேர்ந்த இளம் பெண் மருத்துவர் 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதற்கு காரணமான 4 குற்றவாளிகளும் இன்று காலை என்கவுன்டரில் கொல்லப்பட்டனர்.

    4 பேரும் என்கவுன்டர் செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் வரவேற்பு எழுந்துள்ளது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

     இப்படி ஒரு குற்றத்தை பண்ணிட்டு எத்தனை நாள் ஓட முடியும்.. என்கவுன்டரால் ஹேப்பியான சினிமா பிரபலங்கள்! இப்படி ஒரு குற்றத்தை பண்ணிட்டு எத்தனை நாள் ஓட முடியும்.. என்கவுன்டரால் ஹேப்பியான சினிமா பிரபலங்கள்!

     ஜீவி பிரகாஷ் கருத்து

    ஜீவி பிரகாஷ் கருத்து

    என்கவுன்டர் நடத்திய தெலுங்கானா போலீசாரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜீவி பிரகாஷ், தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

    எச்சரிக்கை மணி

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, ஹைதரபாத் என்கவுன்ட்டர் சம்பவம் வரவேற்கத்தக்கது. பாலியல் பலாத்காரக் குற்றவாளிகளுக்கான நியாயமான தண்டனையாகவே நான் பார்க்கிறேன். தவறு செய்யும் நபர்களுக்கான எச்சரிக்கை மணி என்றே இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. பெண்கள் பாதுகாப்புக்குத் துணை நிற்போம்.. என தெரிவித்துள்ளார்.

    தமிழகத்திலும் நடக்கனும்

    தமிழகத்திலும் நடக்கனும்

    அவரது இந்த டிவிட்டுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் பலர் தமிழ்நாட்டிலும் இதுபோன்ற என்கவுன்டர்கள் நடத்தப்பட வேண்டும் என கூறியுள்ளனர்.

    டிவிட்டர் வாயிலாக

    டிவிட்டர் வாயிலாக

    இசையமைப்பாளரான ஜீவி பிரகாஷ் குமார், அவ்வப்போது நாட்டு நடப்புகள் குறித்தும் பெண்கள் பாதுகாப்பு குறித்தும் குரல் கொடுத்து வருகிறார். நாட்டில் நிகழும் முக்கிய சம்பவங்கள் குறித்தும் டிவிட்டர் வாயிலாக கருத்து தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    GV Prakash welcomes Hyderabad encounter. He says this is the warning bell for the people who commits mistake.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X