twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தேசிய விருது..‘இன்றில்லாவிட்டாலும் ஒரு நாள் வெற்றி நமக்காகும்’..நெகிழ்ந்து நன்றி சொன்ன ஜிவி பிரகாஷ்

    |

    சென்னை : 68வது தேசிய விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் சூர்யாவின் சூரரைப் போற்று படம் 5 பிரிவுகளில் தேசிய விருதுகளை பெற்றுள்ளது.

    சூரரைப் போற்று படத்திற்கு இசையமைத்த ஜிவி பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை தட்டிச் சென்றுள்ளார்.

     National Awards 2022: தந்தையை மிஞ்சிய தனயன்..அப்பாவுக்கு கிடைக்காத தேசிய விருதை தட்டி தூக்கிய சூர்யா National Awards 2022: தந்தையை மிஞ்சிய தனயன்..அப்பாவுக்கு கிடைக்காத தேசிய விருதை தட்டி தூக்கிய சூர்யா

    68வது தேசிய விருதுகள்

    68வது தேசிய விருதுகள்

    68வது தேசிய விருதுகள் குறித்து இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 5 விருதுகளை சூர்யாவின் சூரரைப் போற்று படம் தட்டித் தூக்கியுள்ளது. சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகர், சிறந்த நடிகை மற்றும் சிறந்த இசையமைப்பாளர் என 5 பிரிவுகளில் இந்தப் படம் விருதுகளை பெற்றுள்ளது.

    5 விருதுகளை வென்ற சூரரைப் போற்று

    5 விருதுகளை வென்ற சூரரைப் போற்று

    சுதா கொங்கரா இயக்கத்தில் ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத்தின் பயோ பிக்காக இந்தப் படம் வெளியானது. ஏழைகளும் பயணம் செய்யும் வகையில் விமானப் பயணத்தை எளிதாக்கும் நெடுமாறன் கேரக்டரில் சூர்யா நடித்திருந்தார். இதில் அவரது கனவை அடைய அவர் மேற்கொள்ளும் வழிமுறைகள், தடைக்கற்களை மையமாக வைத்திருந்தார் சுதா கொங்கரா.

    பயோ பிக் படம்

    பயோ பிக் படம்

    இந்தக் கேரக்டரின் நிஜ ஹீரோவான கோபிநாத், தேசிய ராணுவ அகாடெமியில் படித்து, போரில் பங்கேற்று, விவசாயம் செய்து, தேர்தலில் போட்டியிட்டு, ஹெலிகாப்டர் வாடகைக்கு விடும் நிறவனத்தை துவங்கியவர். மேலும் குறைந்த கட்டண விமான நிறுவனத்தையும் அவர் வெற்றிகரமாக துவக்கினார்.

    சிறப்பான பங்களிப்பு

    சிறப்பான பங்களிப்பு

    இதில் குறைந்த கட்டண விமான நிறுவனத்தை கதைக்கருவை மட்டும் மையமாக கொண்டு சூரரைப் போற்று படம் வெளியானது. இந்தப் படத்தில் சூர்யா மிகச்சிறந்த தேர்வு என்பதை படம் வெளியானபோது அனைவரும் ஒப்புக் கொண்டனர். மேலும் படத்தின் ஒவ்வொரு கேரக்டர்களும் சிறப்பான பங்களிப்பை படத்திற்கு வழங்கினர்.

    சிறப்பான சுதா கொங்கரா

    சிறப்பான சுதா கொங்கரா

    சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனமே இந்தப் படத்தை தயாரித்திருந்தது. பயோ பிக்கை படமாக எடுக்க மிகப்பெரிய துணிச்சல் வேண்டும். சிறிது கதையில் மாற்றம் காணப்பட்டாலும் ஆவணப் படமாக மாறக்கூடிய வாய்ப்பு இருக்கும். ஆனால் சிறப்பான திரைக்கதையால், இந்தப் படத்தை மிகச்சிறந்த வெற்றிப் படைப்பாக மாற்றியிருந்தார் சுதா கொங்கரா.

    5 பிரிவுகளில் தேசிய விருதுகள்

    5 பிரிவுகளில் தேசிய விருதுகள்

    இந்தப் படம் வெளியான போதே படத்திற்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என்ற விமர்சனங்கள் எழுந்தன. அதை உண்மையாக்கும்வகையில் தற்போது, இந்தப் படத்திற்கு சிறந்த கதை, திரைக்கதை, நடிகர், நடிகை மற்றும் இசையமைப்பாளர் என 5 பிரிவுகளில் தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

    ஜிவி பிரகாஷ் நன்றி

    ஜிவி பிரகாஷ் நன்றி

    இந்நிலையில் இந்த விருது குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் சூரரைப் போற்று படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இன்றில்லாவிட்டாலும் ஒருநாளில் நாம் நினைக்கும் வெற்றி நமக்கானதாகும், நாம் நினைத்தது போல அனைத்தும் நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    படக்குழுவினருக்கு நன்றி

    படக்குழுவினருக்கு நன்றி

    தன்னுடைய தந்தை வெங்கடேஷ் மற்றும் மனைவி சைந்தவிக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். இயக்குநர் சுதா கொங்கரா மற்றும் நடிகர் சூர்யா, 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்கும் அவர் நன்றி கூறியுள்ளார். இந்த படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை தனக்கு அளித்த ராஜசேகர் பாண்டியனுக்கும் அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

    வாழ்க்கையில் முக்கியமான நாள்

    வாழ்க்கையில் முக்கியமான நாள்

    இந்த நாள் தன்னுடைய வாழ்க்கையில் முக்கியமான நாள் என்றும், தன்னுடைய இசையமைப்பாளர்கள் மற்றும் இசைக்குழுவினருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் தொடர்ந்து பிசியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    GV prakash shared thanks message in his twitter page for winning national award
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X