இங்க ஒரு குத்து.. அங்க ஒரு குத்து.. இது தான் ஜி.வி. பிரகாஷின் கெத்து!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை வெளியாகவுள்ள பிகில் மற்றும் கைதி படங்கள் மாபெரும் வெற்றி பெற நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் பிகில் திரைப்படம் இந்த தீபாவளிக்கு மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
அதேபோல, நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகவுள்ள கைதி படமும் மாபெரும் வெற்றி பெற தனது வாழ்த்துக்களை ட்விட்டரில் ஜி.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

வெறித்தனமான ரசிகர்
நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ், இயக்குநர் அட்லியை போலவே வெறித்தனமான தளபதி ரசிகர். ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான சர்வம் தாள மையம் படத்தில் தளபதி ரசிகராகவே ஜி.வி. பிரகாஷ் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. என்னதான் ஹீரோ அந்தஸ்த்துக்கு உயர்ந்தாலும், ஜி.வி. பிரகாஷ் என்றுமே விஜய் ரசிகர்தான்.
தெறி மாஸ்
நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான ஜி.வி. பிரகாஷ், ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான தலைவா படத்திற்கு இசையமைத்திருந்தார். "வாங்கண்ணா வணங்கங்கண்ணா" "தளபதி தளபதி" என தலைவா படத்தின் அத்தனை பாடல்களையும் மாஸ் ஹிட் பாடலாக கொடுத்திருந்தார். அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படத்திற்கும் ஜி.வி. பிரகாஷ் தான் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இருவருக்கும் வாழ்த்து
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை வெளியாகவுள்ள விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி ஆகிய இரு படங்களுமே மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள் என தனித்தனி ட்வீட்களாக ஜி.வி. பிரகாஷ் பதிவிட்டு விஜய் மற்றும் கார்த்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

அசுரன்
ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் அக்டோபர் 4ம் தேதி வெளியான 100% காதல் படத்தை விட தனுஷின் அசுரன் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் போட்ட வெறித்தனமான இசைக்கு இந்தியளவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்து வரும் ஜெயில் படத்தின் ஆல்பம் அசுரனை போல அற்புதமாக இருக்கும் என ஜி.வி. பிரகாஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











