வாடிவாசல் எனக்கு ஸ்பெஷல்.. ட்விட்டரில் வெளியான அப்டேட்.. ரசிகர்கள் குஷி!

சென்னை : வாடிவாசல் படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Recommended Video

ஜீவி பிரகாஷின் குரலில் மயங்கிய சூர்யா - வீடியோ

நடிகர் சூர்யா, இயக்குனர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் தாணு மற்றும் இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் என்ற மிக பெரிய கூட்டணியுடன் உருவாகும் படம் தான் வாடிவாசல்.

GV Prakashkumar has posted on Twitter about Vaadivasal

இந்த படத்தை பற்றி முக்கிய அப்டேட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ்குமார், வாடிவாசல் தனது 75 படம், இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல் என்றும், இந்த படத்திற்கான இசை வேலைகளை தற்போதே துவங்கி விட்டதாகவும் தனது ட்விட்டரில் தெரிவித்துளளார். வெற்றிமாறன், சூர்யா, தாணு என்று சக்திவாய்ந்த கூட்டணியில் படம் உருவாவதால் படத்தின் இசை தனித்துவமாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

இதை கண்ட ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் ஆடிப்போய் உள்ளனர். வாடிவாசல் படத்தின் அப்டேட்டுக்காக சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் காத்து இருக்கிறார்கள். தற்போது அப்டேட் கிடைத்ததும் ஜிவி கூறிய வார்த்தைகளினால் ஒட்டுமொத்த ரசிகர்களும் குதுகலமாகியுள்ளனர்.

GV Prakashkumar has posted on Twitter about Vaadivasal

சூர்யா ஜிவி.பிரகாஷ் கூட்டணியில் சூரரைப்போற்று படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் அனல் பறக்க இருக்கும் நிலையில் மீண்டும் ஜிவி பிரகாஷ் இசையில் சூர்யா நடிப்பது மிக பெரிய விஷயம், இதை தாண்டி இது ஜிவி.பிரகாஷின் 75வது படமும் கூட, அது தான் இந்த படத்தின் கூடுதல் சிறப்பு .

அசுரன் என்ற மாபெரும் வசூல் அரக்கனை இயக்கிய வெற்றி இயக்குனர் வெற்றிமாறன் தான் இந்த படத்தையும் இயக்குகிறார். மேலும் அதே அசுரன் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் தாணு இந்த படத்திலும் இடம் பெற்றிருப்பது மற்றொரு பெரிய விஷயம். இப்படி முழுக்க முழுக்க ரசிகர்களின் அத்தனை பிடித்தமானவர்களும் ஒரே படத்தில் இணைந்திருப்பது தான் படத்திற்கு இப்படியொரு எதிர்பார்பை ஏற்படுத்தி உள்ளது.

GV Prakashkumar has posted on Twitter about Vaadivasal

இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ், இசைக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஆனால் அதைவிட்டு டிராக் மாறி ஜிவி நடிக்க சென்றாலும் தனது நிலைக்கு திரும்பி வருவது அவரது ரசிகர்களை பெரிய அளவில் உற்சாகப்படுத்தியிருக்கிறது. மேலும் வாடிவாசல் படம் மிக பெரிய கூட்டணியில் உருவாகி வருவதனால் படத்திலிருந்து இனி வரும் ஒவ்வொரு அப்டேட்டுக்கும் சமூகவலைத்தளங்கள் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X