பேட்டும் கையுமா.. அட்ரா மச்சா.. அள்ரா லைக்ஸை.. கெத்து ஜிவி.. சொக்கிப் போன ரசிகர்கள்!

சென்னை : தமிழ் சினிமாவின் வெற்றிகரமான இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருகிறார் ஜி.வி.பிரகாஷ். தனது உடல்வாகுக்கு எது வருமோ அதையே தனது ஸ்டைலாக்கிக் கொண்டு ரசிகர்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்து விட்டார்.

அண்மையில் இவர், இசையமைத்த சூரரைப் போற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை யாராலும் அசைச்சிக்க முடியாது என்று கூறும் அளவுக்கு அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

இவரது நடிப்பில் பேச்சுலர் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுத்தந்து. தற்போது ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அசத்தலான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

 வெயிலோட விளையாடி

வெயிலோட விளையாடி

வசந்த பாலன் இயக்கத்தில் உருவான வெயில் திரைப்படத்திற்கு முதன் முறையாக இசையமைத்தார். அப்படத்தில் வரும் வெயிலோட விளையாடி , உருகுதே மருகுதே போன்ற பாடல்கள் மக்களிடை நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தன.

 ஹிட்டடித்த பாடல்கள்

ஹிட்டடித்த பாடல்கள்

கிரிடம், பொல்லாதவன், அங்காடி தெரு,ஆடுகளம், ஆயிரத்தில் ஒருவன் என இவரது இசை பல மாயாஜாலங்களை செய்தது. அதுவும், தனுஷ், வெற்றிமாறன், ஜிவி பிரகாஷ் கூட்டணி என்றால் சொல்லவே வேண்டாம் பாடல் நிச்சயம் தெறிக்கும் என்பது அவரது ரசிகர்களின் எண்ணம்.

 இணையத்தில் டிரெண்டானது

இணையத்தில் டிரெண்டானது

இதற்கு முன் வெளியான அசுரன் திரைப்படத்திலும் ஜி.வி.பிரகாஷின் இசை பெரிதும் பாராட்டப்பட்ட நிலையில் நடிகராகவும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் நடித்துள்ள 'பேச்சுலர்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் டிரெண்டாகி உள்ளது.

 இளைஞர்களை கவரும் கதை

இளைஞர்களை கவரும் கதை

சதீஷ் செல்வகுமார் என்று புதுமுக இயக்குநர் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள ஒரு காதல் திரைப்படம் ஆகும். காதலினால் ஏற்படும் பிரச்னைகளையே இப்படத்தில் பிரதான இருக்கும் என்று கூறப்படுகிறது. நிச்சயம் இப்படம் இளைஞர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 பேட்டுடன் போஸ்

பேட்டுடன் போஸ்

பேச்சுலர் படத்தை அடுத்து அடங்காதே, ஜெயில், காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட பல திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் படு பிஸியாக நடித்து வருகிறது. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பேட்டும் கையுமே சும்மா கெத்தா லுக்குவிட்டுக்கொண்டு இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் . மேலும் இந்த புகைப்படத்திற்கு கேப்சனாக Outside the off stump போட்டுள்ளார். இந்த புகைப்படம் பலரது லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Read more about: gv prakash kumar twitter
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X