Rebel Box Office: புரட்சிகரமான கல்லூரி மாணவனாக மாறிய ஜிவி பிரகாஷ்.. ரெபெல் முதல் நாள் வசூல்!

சென்னை: இசையமைப்பாளராகவும், ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டு இருக்கிறார் ஜி.வி. பிரகாஷ். இவர் நடிப்பில் நேற்று தியேட்டரில் வெளியானத் திரைப்படம் ரெபல். இப்படத்தை அஜய் ஞானமுத்து, எம்.எஸ். பாஸ்கர், ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோர் பாராட்டி நிலையில், படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்று பார்க்கலமா.

80ஸ்களில் கேரளாவை பின்னணியாக வைத்து, மூணாறு தமிழ் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் பாலக்காடு கல்லூரியில் போராடும் அவல நிலையை இப்படத்தில் அழகாக காட்டி இருக்கிறார் இயக்குநர். படத்தின் கதை 80 கால கட்டத்தில் நடப்பதால், அதற்கு ஏற்றால் போல இடங்களும் உடைகளும் படத்தில் இருப்பது படத்திற்கு பிளஸாக அமைந்துள்ளது.

GV Prakash s political thriller movie Rebel Day 1 Box Office Collection

ரெபல் கதை: மூணார் நெற்றிக்குடியில் வசிக்கும் இளைஞன் ஜி வி பிரகாஷ் குமார் (கதிர்) என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவனது குடும்பம் அங்கிருக்கும் எஸ்டேட்டை நம்பியும் சிறு சிறு தொழில்களை நம்பியே பிழைப்பு நடத்தி வருகிறது. அது போன்று பல குடும்பங்கள் வறுமையில் வாடி வருகின்றனர். இந்த நிலை மாற கல்வியதால் முடியும் என்று கடுமையாக படித்து கல்லூரியில் சேருகிறார்கள்.

ஜி வி பிரகாஷ்: ஆனால், கல்லூரியில் KSQ மற்றும் SFY என இரு மாணவ சங்கங்கள்தான் மொத்த கல்லூரியை ஆள்கிறது எனத் தெரிய வருகிறது. அதிலும், KSQ சங்கம், தமிழ் மாணவர்களை ராகிங் என்ற பெயரில் கொடுமைப்படுத்துகிறது. இதனால் ஏற்படும் இழப்பால், கேரள மாணவ சங்கங்களை எதிர்க்கிறார் கதிர். அவர்களுக்கு எதிரான போராட்டத்தில் வென்றாரா இல்லையா என்பதே கதை.

உண்மை சம்பவம்: கதாநாயகன் ஜி.வி. பிரகாஷ் புரட்சிகரமான கல்லூரி மாணவராக அசத்தியுள்ளார். கதாநாயகி மமிதா பைஜூ அழகாவும் போதுமான நடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். பாடல்கள் மற்றும் பின்னணி இசை கேட்கும்படி இருக்கிறது. படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றால், அது அருண் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு என்று சொல்லாம். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை இளைஞர்களை கவரும் வண்ணம் சுவாரஸ்யமாக இயக்கியுள்ளார் இயக்குனர் நிகேஷ்.

முதல் நாள் வசூல்: இத்திரைப்படத்தை அஜய் ஞானமுத்து, எம்.எஸ். பாஸ்கர், ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் பாராட்டிய நிலையில், இத்திரைப்படம் நேற்று தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இத்திரைப்படம் முதல் நாளில் ரூ 2 கோடியை வசூலித்துள்ளது. இன்றும் நாளையும் விடுமுறை என்பதால், படத்தின் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இப்படத்தில், வெங்கடேஷ் வி.பி., ஷாலு ரஹீம், கருணாஸ், ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத் மற்றும் சுப்ரமணிய சிவா ஆகியோர் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X