கேரள மக்களுக்கு உதவ சமூக வலைதளத்தை பயன்படுத்திய ஜிவி.பிரகாஷ்!
ஜிவி.பிரகாஷ் கேரள மாநில அவசர உதவி எண்களை பகிர்ந்துள்ளார்
Recommended Video

சென்னை: கேரள மாவட்டங்களின் அவசர உதவி எண்களை நடிகர் ஜி.வி.பிரகாஷ் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
கேரள மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்கு மழை கொட்டி தீர்த்து வருவதால் பல மாவட்டங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன.

குறிப்பாக இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் மற்றும் கொல்லம் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி கடந்த 48 மணி நேரத்தில் 26பேர் உயிரிழந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரபலங்களும் திரையுலகினரும் கேரள மாநிலத்திற்கு இயன்ற உதவிகளை செய்ய முன்வந்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் கேரள மாவட்டங்களின் அவசர உதவி எண்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











