பென்சிலுக்காக பென்சில் சைசுக்கு மாறிய ஜிவி!

By Shankar

ஒரு பக்கா நடிகராகிவிடுவது என்பதில் தீவிரமாக இருக்கிறார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார்.

இதனால் பல இசையமைப்பு வாய்ப்புகள் அவர் கையைவிட்டுப் போனாலும கவலையில்லை என்ற மனநிலைக்கு அவர் வந்துவிட்டார்.

GV Praksha reduces his weight for Pencil

இப்போது அவர் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் பென்சில் படத்துக்காக தன் உடல் எடையை கணிசமாகக் குறைத்துள்ளாராம் ஜிவி.

படத்தில் பள்ளி மாணவன் தோற்றத்தில் தெரிவதற்காக இந்த எடை குறைப்பு செய்துள்ளாராம். இதற்காக தினமும் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்து வருகிறாராம்.

படம் ஆரம்பிக்கும் முன் 69 கிலோவாக இருந்த இவரது உடல் எடை தற்போது 60 கிலோவாக குறைந்துள்ளதாம். இப்படத்தை மணி நாகராஜ் என்பவர் இயக்குகிறார். இப்படத்தை தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் இசைப் பணியையும் ஜீ.வி.பிரகாஷே கவனிக்கிறார்.

ஏற்கெனவே மதயானைக் கூட்டம் படத்தைத் தயாரித்தார் ஜிவி. படம் பெரிதாகப் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பென்சில் படத்தில் ஜிவிக்கு ஜோடியாக ஊதா கலரு ரிப்பன் புகழ் ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X