சூர்யாவுக்கு கதை சொல்லப் போறேன்.. பிடிக்கும்னு நம்புறேன்.. கெளதம் மேனனின் அடுத்த முயற்சி!

சென்னை: காக்க காக்க, வாரணம் ஆயிரம் என சூர்யா - கெளதம் மேனன் காம்பினேஷனில் இரண்டு பெரிய படங்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

Gautam Menon exclusive update | VTV 2 | Vaaranam Aayiram | Dhruva Natchathiram

துருவ நட்சத்திரம் படத்தின் மூலம், மீண்டும் இவர்கள் இணைவார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, ஏமாற்றமே மிஞ்சியது.

இந்நிலையில், தற்போது, மீண்டும் சூர்யாவுக்காக ஒரு சூப்பர் கதையை கெளதம் வாசுதேவ் மேனன் ரெடி பண்ணியிருக்காராம்.

இசை.. காதல்

இசை.. காதல்

கெளதம் வாசுதேவ் மேனன் படங்கள் என்றாலே, இசைக்கும், காதல் காட்சிகளுக்கும் அதீத முக்கியத்துவம் மற்றும் அதில் ஒரு இணையற்ற அழகியல் இருக்கும். இந்நிலையில், தற்போது, சூர்யாவுக்காக கெளதம் மேனன் உருவாக்கியுள்ள புதிய கதை, இசை மற்றும் காதல் சம்பந்தப்பட்ட கதை தானாம்.

கதை சொல்லப் போறேன்

கதை சொல்லப் போறேன்

ஆக்‌ஷன் கதைகளில் நடித்து வரும் நடிகர் சூர்யாவை, மீண்டும் சாக்லேட் பாய் சூர்யாவாக இந்த படத்தில் ரசிகர்கள் பார்க்கலாம், இன்னும் பத்து நாட்களில், சூர்யாவை நேரில் சந்தித்து, கதையை சொல்லப் போறேன் என சமீபத்தில், யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கெளதம் மேனன் கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

மீண்டும் கிட்டார்

மீண்டும் கிட்டார்

வாரணம் ஆயிரம் படத்தில் கிட்டாரை எடுத்துக் கொண்டு, "நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை", "அடியே கொல்லுதே" என இளைஞர்களின் ஹார்ட் பீட்டுகளை எகிற வைத்த சூர்யா, மீண்டும் அப்படி ஒரு ரொமான்டிக் லுக்கில் நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை. கெளதம் மேனனின் இந்த புதிய நகர்வு அதனை விரைவில் சாத்தியப்படுத்தும்.

10 ஆண்டுகளை கடந்த விடிவி

10 ஆண்டுகளை கடந்த விடிவி

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிம்பு, திரிஷா, சமந்தா நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் சமீபத்தில் 10 ஆண்டுகளை கடந்ததை சமூக வலைதளத்தில் இளைஞர்கள் கொண்டாடினர். மீண்டும் அப்படி ஒரு படத்தை கெளதம் மேனன் கொடுக்க வேண்டும் என்றும், கோரிக்கை வைத்து வருகின்றனர்.

என்ன கதை

என்ன கதை

சூர்யாவுக்காக கெளதம் மேனன் உருவாக்கியுள்ள கதை குறித்தும், சமூக வலைதளத்தில், ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார் கெளதம் மேனன். கமல் மற்றும் காதம்பரி எனும் இரண்டு இசை கலைஞர்களுக்கு இடையே ஏற்படும் காதல் தான் படத்தின் கதையாம். கமல் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்தால், நிச்சயம் வேற லெவல் தான்.

சம்மதிப்பாரா

சம்மதிப்பாரா

வருண் நடிப்பில் உருவாகி வரும் ஜோஷ்வா இமை போல் காக்க படத்தை இயக்கி வரும் கெளதம் மேனன், மீண்டும் சூர்யாவை வைத்து, இந்த இசை கலந்த காதல் காவியத்தை இயக்குவாரா? சூர்யாவுக்கு இந்த கதை நிச்சயம் பிடிக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக கெளதம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சூர்யா மீண்டும் இந்த கூட்டணிக்கு சம்மதிப்பாரா? என்பதே ரசிகர்களின் ஒட்டுமொத்த கேள்வியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X