குக்கூ இயக்குநர் வீட்டில் குவா குவா சத்தம்.. ஆண் குழந்தைக்கு அப்பா ஆனார் ராஜு முருகன்!

சென்னை: இயக்குநர் ராஜு முருகன், ஹேமா சிம்ஹா தம்பதியினருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பத்திரிகையாளராக பணியாற்றி வந்த ராஜு முருகன், இயக்குநர் லிங்குசாமியிடம் உதவி இயக்குநராக சில காலம் பணியாற்றினார்.

பின்னர், 2014ம் ஆண்டு அட்டகத்தி தினேஷ், மாளவிகா நாயர் நடிப்பில் வெளியான குக்கூ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.

சமூக அக்கறை

சமூக அக்கறை

பத்திரிகையாளராக இருந்து இயக்குநர் ஆன ராஜு முருகனுக்கு சமூக அக்கறையும் சமூக பார்வையும் அதிகமாகவே இருக்கிறது. அவர் இயக்கும் படங்களில், அதன் நெடி அளவுக்கு அதிகமாகவே தென்படுவதை வைத்தே அதனை அறிந்து கொள்ளலாம். குக்கூ படத்தைத் தொடர்ந்து ஜோக்கர், ஜிப்ஸி உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.

ஹேமா சின்ஹா

ஹேமா சின்ஹா

சன் மியூசிக் ஆரம்பித்த காலத்தில் பிரபல வீஜேவாக இருந்தவர் ஹேமா சின்ஹா. கொஞ்ச காலம் கழித்து ஆள் என்ன ஆனார் என்றே தெரியாமல் இருந்த ரசிகர்களுக்கு, ராஜு முருகனுடன் 2016ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார் என்ற செய்தி அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் அளித்தது.

தேசிய விருது

தேசிய விருது

குக்கூ படத்தை இயக்கி தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த ராஜு முருகன் ஜோக்கர் படத்தை இயக்கி தேசிய விருதை வென்று, இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார். அந்த படத்திற்கு மேலும் பல விருதுகள் குவிந்தன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜிப்ஸி திரைப்படம் சென்சாரில் சிக்கியதால், சிதைந்தே வெளியானது.

Recommended Video

Virat Kohli allows his wife anushka to cut his Hair | Katrina Kaif into Household Works
ஆண் குழந்தை

ஆண் குழந்தை

கடந்த ஆண்டு வெளியாக வேண்டிய ஜிப்ஸி திரைப்படம், பல தடைகளை தாண்டி சமீபத்தில் வெளியான நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு, காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், அந்த கவலைகளை மறக்கடிக்கும் விதமாக ராஜு முருகன், ஹேமா சின்ஹா தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X