twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எச். ராஜாவிற்கு வேலை வந்துவிட்டது.. ஜிப்ஸி படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள்.. 10 திடுக் சீன்கள்!

    இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் வெளியாக உள்ள ஜிப்ஸி படத்திற்கு தமிழக பாஜக கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளதாக பேசிக்கொள்கிறார்கள்.

    |

    Recommended Video

    Gypsy Trailer Review: ஜிப்ஸி ட்ரைலர் எப்படி இருக்கு?- வீடியோ

    சென்னை: இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் வெளியாக உள்ள ஜிப்ஸி படத்திற்கு தமிழக பாஜக கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளதாக பேசிக்கொள்கிறார்கள்.

    இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில், நடிகர் ஜீவா நடிப்பில் ''ஜிப்ஸி'' படம் தயாராகி ரிலீசுக்காக காத்து இருக்கிறது. ஜீவாவிற்கு நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த படம் ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதேபோல் ஜோக்கர் படத்திற்கு மீண்டும் சமுதாயத்தில் தன் படம் மூலம் அழுத்தமான தடத்தை பதியலாம் என்று ராஜு முருகன் முடிவு செய்துள்ளார்.

    வைரல் ஆனது

    வைரல் ஆனது

    ஜிப்ஸி படத்தின் டிரைலர் ஏற்கனவே இணையத்தில் வெளியாகிவிட்டது. மத பிரச்னையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கும் அரசியல் காதல் படமாகும் இது. அதேபோல் இந்த படத்தில் சமீப கால அரசியல் பிரச்சனைகள் குறித்த காட்சிகளும் இருக்கிறது.

    கட்

    கட்

    இந்த படத்தில் வலது சாரிகளுக்கு எதிரான கடுமையான வசனங்கள் இடம்பெற்று இருக்கிறது. அதேபோல் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை குறிக்கும் விதமாகவும் நிறைய காட்சிகள் இருக்கிறது. மேலும் இந்துத்துவா அரசியலுக்கு எதிராகவும் இதில் நிறைய காட்சிகள் இருக்கிறது.

    10 காட்சிகள்

    10 காட்சிகள்

    இந்த நிலையில் இந்த படத்தில் 10 இடங்களில் கட் செய்ய வேண்டும் என்று மத்திய சென்சார் போர்ட் தெரிவித்துள்ளது. இந்த 10 காட்சிகளும் பிரச்சனையை ஏற்படுத்தும் என்று அவர்கள் கூறியுள்ளனர். அதேபோல் சில வசனங்களை மியூட் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. அதன்பின்தான் படத்திற்கு சான்றிதழ் அளிப்போம் என்று சென்சார் போர்ட் கூறிவிட்டது .

     இன்னும் இல்லை

    இன்னும் இல்லை

    ஆனால் இதற்கு படக்குழு இன்னும் ஓகே சொல்லவில்லை என்கிறார்கள். மீண்டும் படத்தை பார்க்க சொல்லும்படி சென்சார் போர்ட் அதிகாரிகளுக்கு ஜிப்ஸி படக்குழு கோரிக்கை வைக்க உள்ளது. இதனால் படத்தின் ரிலீஸ் தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பாஜக எப்படி

    பாஜக எப்படி

    அதே சமயம் ஜிப்ஸி படம் வெளியான பின் அதை தமிழக பாஜக தலைவர்கள் கடுமையாக எதிர்க்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். மெர்சல் படத்தை தமிழக பாஜக கடுமையாக எதிர்த்தது. இதனால் எச். ராஜா மற்றும் விஜய் இடையே சண்டை வந்தது. அதேபோல் ஜிப்ஸி படத்திற்க்கு எதிராகவும் தமிழக பாஜகவினர் போராட்டம் செய்ய வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

    English summary
    Gypsy film may be opposed by BJP party in Tamilnadu due to some controversial scenes.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X