சென்சாரில் கட்.. இணையத்தில் ரிலீஸ்.. ஜிப்ஸி ஸ்னீக் பீக் !

சென்னை : ஜிப்ஸி படத்தில் சென்சாரில் கட்டான காட்சியை இணையத்தில் வெளியிட்டது படக்குழு.

Recommended Video

Gypsy Trailer Review: ஜிப்ஸி ட்ரைலர் எப்படி இருக்கு?- வீடியோ

நடிகர் ஜீவா நடிப்பில் வரும் மார்ச் 6 வெளியாக இருக்கும் படம் தான் ஜிப்ஸி . இந்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜு முருகன் இயக்கி இருக்கிறார்.படம் இதற்கு முன்பே தணிக்கைக்குழுவால் 'ஏ' சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து படத்தின் ஸ்னீக் பீக் ஒன்று வெளியாகியிருக்கிறது.

 Gypsy movie sneak peek out

இந்த ஸ்னீக் பீக்கிலே படக்குழு சென்சார் கட் 1 என்றே குறிப்பிட்டு பதிவேற்றி இருக்கின்றது. இத்தனை நாட்கள் படம் தாமதமானதுக்கும் தணிக்கை குழுவே காரணமாக இருந்தது. படத்தின் கடினமான அரசியல் வசனங்கள் படம் வெளியாவதற்கு தடையாய் இருந்தது. இந்நிலையில் நீண்ட போராட்டங்களுக்கு பிறகு இந்த படம் மார்ச் 6 வெளியாகுகிறது .

 Gypsy movie sneak peek out

இந்த படத்தின் ஸ்னீக் பீக்கில் கூட நீதித்துறை பேச்சை காவல்துறை கேட்க மாட்டிங்கிறது என்றும் காவல்துறை பேச்சை நீதித்துறை கேட்கமாட்டிங்கிறது என்னும் வசனங்களை வைத்திருக்கிறார் ராஜு முருகன். மேலும் ஸ்னீக் பீக்கில் காவல்துறை அதிகாரியை கெட்ட வார்த்தையில் ஒரு கூலித்தொழிலாளி திட்டுவதை போன்ற கடினமான காட்சிகளும் இடம் பெற்றிருக்கிறது . இதனால் கூட தணிக்கைக்குழு இந்த காட்சியை படத்தில் இருந்து நீக்க சொல்லிருக்கலாம் என்று தெரிகிறது .

 Gypsy movie sneak peek out

படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ள நிலையில் இந்த படத்தை நேற்று திமுக கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் படத்தின் முன்னோட்ட காட்சியை சக அரசியல் தலைவர்களுடனும் இயக்குனர் ராஜு முருகனுடனும் பார்த்தார். ஜீவா பட வரிசையில் இந்த படம் மிக பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இந்த படம் ஜீவாவிற்கு ஒரு பெரிய வெற்றி படமாக அமையும் என்றும் கூறியுள்ளனர். படம் வரும் மார்ச் 6 வெளியாகுகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார்.

 Gypsy movie sneak peek out

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X