அப்பாடா.. ஒரு வழியாக ரிலீஸாக போகிறது ஜிப்ஸி .. குடியரசு தினத்தன்று!
Recommended Video
சென்னை : ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் ஜிப்ஸி.
ஜோக்கர் மற்றும் குக்கூ படங்களுக்கு பிறகு ராஜு முருகன் இயக்கி இருக்கும் படம் தான் ஜிப்ஸி .இந்த படத்தின் டீசர் ஜனவரி 2019ல் வெளியானது .அதற்கு பிறகு ஒரு பாடலும் படக்குழு சார்பாக வெளியிடபட்டது அந்த பாடலில் சமூக போராளிகள் பலரை வைத்து அந்த பாடலை எடுத்திருப்பார் இயக்குனர் ராஜீ முருகன் .

உண்மையிலே அந்த பாடலுக்கு பிறகு தான் படத்திற்கான பிரச்சினை துவங்கியது என்று சொல்லலாம். ராஜு முருகன் இயல்பில் அரசியல் விமர்சனங்களை படத்தில் மிக எதார்த்தமாக வைப்பார். அவரின் குக்கூ படத்திலும் சரி ஜோக்கர் படத்திலும் சரி அரசியல் விமர்சனங்கள் கடுமையாக இருக்கும். தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவிலும் சமீப காலங்கலாக கருத்து சுதந்திரம் என்பது மறுக்கபட்டு தான் வருகிறது .
பல இயக்குனர்கள் இதற்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள் சிலர் கொடுப்பதில்லை. ஹிந்தியில் கூட உட்தா பஞ்சாப் என்ற படத்திற்கு பல காட்சிகளை நீக்க வேண்டும் என்று சென்சார் ஆணையிட கோர்ட்டுக்கு சென்ற அந்த படக்குழு தங்களது நீதியை அங்கு பெற்றது. அந்த தீர்ப்பின் முடிவில் சென்சார் குழுவுக்கு காட்சியை நீக்க சொல்ல உரிமை கிடையாது என திட்டவட்டமாக கோர்ட் கூற ஒரு சீன் கட்டுடன் உட்தா பஞ்சாப் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது .
தற்போது ஜிப்ஸி படக்குழு கோர்ட் வரை செல்லாவிட்டாலும் பல தடங்கல்களுக்கு இடையே தான் படத்தை தற்போது ரிலீஸ் செய்ய உள்ளது .இந்த படத்தின் டீசரை பார்க்கும் போது என்ன என்ன சமூக பிரச்சினைகளை இயக்குனர் ராஜீ முருகன் பேசியிருப்பார் என்பது தெரிகிறது .
தற்போது ஜிப்ஸி படமானது 2020 ஜனவரி 24 ரிலீஸாகும் என்று படக்குழுவால் தெரிவிக்கபட்டிருக்கிறது. மேலும் படத்தின் ஒரு போஸ்டர் ரிலீஸ் செய்யபட்டு அதில் 'குடியரசு தினத்தையொட்டி இவன் கொடி பறக்கும் ' என்ற வசனத்துடனே ஜிப்ஸி போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டு படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது


Click it and Unblock the Notifications











