Don't Miss!
- News
தடுத்த ஆரிய வந்தேறிகள்.. தமிழர்களை எழுத வைத்து விடியல் தந்த கருணாநிதி பேனா -கார்த்திகேய சிவசேனாபதி
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Finance
முதலீட்டாளர்களின் நலனுக்காகவே FPO ரத்து.. அதானி செம ட்விஸ்ட்!
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டணி.. பூரண நலமடைய ஈசனை பிரார்த்திக்கிறேன்.. எச். ராஜா ட்வீட்!
சென்னை: நடிகர் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பில் நடைபெற்ற விபத்தில் சிக்கி காயமடைந்துள்ள நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அவர் பூரண நலமடைய வேண்டும் என பாஜகவை சேர்ந்த எச். ராஜா பிரார்த்தனை செய்து ட்வீட் போட்டுள்ளார்.
விஜய் ஆண்டனிக்கு பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபடமாக மாறியது. பார்ட் 2 படங்கள் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில், பிச்சைக்காரன் 2 படத்தை தயாரித்து, இயக்கி, இசையமைத்து நடித்து வருகிறார் நடிகர் விஜய் ஆண்டனி.
சமீபத்தில் துணிவு படத்தில் அஜித் ஓட்டும் ஜெட் ஸ்கை வாகனத்தை ஓட்டிய போது ஏற்பட்ட விபத்தில் அவர் முகத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Thunivu Box office worldwide: 150 கோடியை கடந்த துணிவு கலெக்ஷன்... அஜித்தின் தரமான சம்பவம்

இசையமைப்பாளர் டூ ஹீரோ
விஜய்யின் சுக்ரன் படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. டிஸ்யூம், வேட்டைக்காரன், காதலில் விழுந்தேன், அங்காடி தெரு, வெடி, வேலாயுதம் என ஏகப்பட்ட படங்களுக்கு இசையமைத்து வந்த விஜய் ஆண்டனி நான் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். நான், சலீம், சைத்தான், பிச்சைக்காரன், காளி, இந்தியா பாகிஸ்தான், எமன், திமிரு புடிச்சவன், கோடியில் ஒருவன் என பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் விஜய் ஆண்டனி.

பிச்சைக்காரன் 2
இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் விஜய் ஆண்டனிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், பிச்சைக்காரன் 2 படத்தை தானே தயாரித்து இயக்கவும் முடிவு செய்து இயக்கி வருகிறார் விஜய் ஆண்டனி. அந்த படத்தின் படப்பிடிப்பில் நடைபெற்ற ஒரு ஸ்டன்ட் காட்சியில் திடீரென எதிர்பாராத விதமாக ஏற்பட்ட படகு விபத்து காரணமாக நடிகர் விஜய் ஆண்டனிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

ரிஸ்க் எடுத்து
ஸ்டன்ட் காட்சிகளில் டூப் போட்டு நடிக்காமல் விஜய் ஆண்டனி ஜெட் ஸ்கையை ஓட்டும் காட்சியில் நடித்துள்ளார். அவருடன் நடிகை காவ்யா தாப்பரும் அமர்ந்து சென்ற நிலையில், திடீரென இன்னொரு படகின் மோது விஜய் ஆண்டனி ஓட்டி வந்த ஜெட் ஸ்கை மோதி விபத்துக்குள்ளானது. ஆனால், அதிர்ஷ்டவசமாக நாயகி எந்த ஒரு காயமும் இன்றி தப்பிய நிலையில், விஜய் ஆண்டனிக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

சென்னையில் சிகிச்சை
மலேசியாவின் கோலாலம்பூரில் வைத்து முதற்கட்டமாக நடிகர் விஜய் ஆண்டனிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னைக்கு கொண்டு வரப்பட்டு தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அவரது உயிருக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை நலமுடன் இருக்கிறார் என தகவல்கள் வெளியாகி ரசிகர்களை சற்றே ஆறுதல் படுத்தி உள்ளது.

எச். ராஜா பிரார்த்தனை
விஜய் ஆண்டனி விரைவில் குணமடைய வேண்டும் என பல பிரபலங்களும் ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வரும் நிலையில், எச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், "படப்பிடிப்பில் விபத்துக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் நடிகர் திரு.
vijayantony அவர்கள் பூரண நலமடைய ஈசனை பிரார்த்திக்கிறேன்." என ட்வீட் போட்டுள்ளார்.