ப்ரயோஜனம் இல்லை, நாங்க உதவினாலும் படம் ஓடாதாம்: உதயநிதியை கலாய்த்த ஹெச். ராஜா
சென்னை: நாங்கள் உதவினாலும் இப்படை வெல்லும் படம் ஓடாதாம் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
கவுரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் நடித்துள்ள இப்படை வெல்லும் படம் வரும் 9ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் படத்திற்கு இலவசமாக விளம்பரம் தேடுவது பற்றி உதயநிதி பேசியுள்ளார்.
மெர்சல் படத்தை போன்று பாஜக தலைவர்கள் இப்படை வெல்லும் படத்திற்கும் விளம்பரம் தந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார் அவர்.

இப்படை வெல்லும்
மெர்சல் படத்திற்கு விளம்பரம் செய்தது போன்று என் இப்படை வெல்லும் படத்திற்கும் தமிழிசை மற்றும் ஹெச். ராஜாவை பேச வைக்கலாம் என நினைக்கிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
ஓடாது
உதயநிதி ஸ்டாலின் கூறியதை கேட்ட ஹெச். ராஜாவோ, ஒன்னும் ப்ரயோஜனம் இல்லை. நாங்க உதவினாலும் படம் ஓடாதாம் என்று ட்வீட்டியுள்ளார்.
மெர்சல்
மெர்சலுக்கு உதவினத ஒத்துக்குறீங்க ;-))
புரமோஷன்
கருப்பன் குசும்புக்காரன்.. அடுத்த படத்த புரோமசன் பன்ன பாக்குறான்.. 😂😐


Click it and Unblock the Notifications











