H. Vinoth - கமல் - ஹெச் வினோத் கூட்டணி.. ரசிகர்களை அசரவைத்த புதிய தகவல்

சென்னை: H Vinotha And Kamal (ஹெச்.வினோத் மற்றும் கமல்) கமல் ஹாசனும், ஹெச். வினோத்தும் புதிய படத்தில் இணையவிருக்கிறார்கள் என கூறப்பட்ட சூழலில் அந்தப் படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சதுரங்க வேட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஹெச்.வினோத். முதல் படத்திலேயே சென்சிட்டிவான சப்ஜெக்ட்டை கையில் எடுத்து அதை மிக நேர்த்தியாக படமாக்கினார். படத்தில் இடம்பெற்ற வசனங்களும், காட்சியமைப்பும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. முதல் படத்திலேயே தான் எவ்வளவு தேர்ந்த இயக்குநர் என்பதை அவர் நிரூபித்துவிட்டதால் அவரது படங்கள் மீது ஒரு எதிர்பார்ப்பு எழ ஆரம்பித்தது.

 H.Vinoth And Kamal Movie Shoot Will Starts in November

தீரன் அதிகாரம் ஒன்று: அந்தப் படத்துக்குப் பிறகு கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கினார். உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதேசமயம் காவல் துறையினர் என்கவுன்ட்டர் செய்வதையும், காவல் துறையையும் வினோத் ரொம்பவே புகழ்ந்திருக்கிறார் என்ற சர்ச்சையும் எழுந்தது. அதை காலப்போக்கில் அவரும் புரிந்துகொண்டார்.

அஜித்துடன் தொடர் கூட்டணி: முதல் இரண்டு படங்கள் மெகா ஹிட்டானதையடுத்து அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது வினோத்துக்கு. ஆனால் அஜித்துடன் இணைந்த முதல் படம் தனது சொந்த கதையாக இல்லாமல் பிங்க் படத்தை ரீமேக் செய்தார் வினோத். அப்படி ரீமேக் செய்யப்பட்ட நேர்கொண்ட பார்வை படம் கலவையான விமர்சனங்களை பெற அடுத்ததாக வலிமை படத்தை இயக்கினார். அந்தப் படம் கதை ரீதியாக வரவேற்பை பெற்றாலும் ஏதோ ஒன்று மிஸ் ஆனதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

பட்டையை கிளப்பிய துணிவு: நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு மீண்டும் அஜித்தை வைத்து துணிவு படத்தை இயக்கினார். வங்கி கொள்ளை மற்றும் வங்கி அடிக்கும் கொள்ளை ஆகிய விஷயங்களை கமர்ஷியலாக சொல்லியிருந்தார். இருப்பினும் படத்தில் ஆங்காங்கே ஹெச்.வினோத்தின் டச்சும் இருந்தது. துணிவுடன் களமிறங்கிய வாரிசு கண்டெண்ட் ரீதியாக வீக்கானதால் துணிவு படம் பொங்கல் வின்னரானது.

 H.Vinoth And Kamal Movie Shoot Will Starts in November

கமலுடன் கூட்டணி: துணிவு படத்தை முடித்த பிறகு வினோத் யாரை இயக்கவிருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. அவர்களை ஆச்சரியப்படுத்தும்படி சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. அதாவது கமல் ஹாசனை ஹெச்.வினோத் இயக்கப்போகிறார் என்றும் மணிரத்னத்தின் படத்திற்கு முன்பாகவே கமல் ஹாசன் இந்தப் படத்தில் நடிப்பார் என்றும் கூறப்பட்டது.

புதிய தகவல்: இந்நிலையில் ஹெச்.வினோத் - கமல் ஹாசன் படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப் படமான மல்டி ஸ்டாரர் படமாக உருவாகவிருக்கிறதாம். முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறாராம். மேலும் நவம்பர் மாதம் இந்தப் படத்துக்கான ஷூட்டிங் தொடங்கும் என்றும், கமல் ஹாசனுக்கான போர்ஷனை ஒரு மாதத்துக்குள் ஷூட் செய்து முடிக்க வினோத் திட்டமிட்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X