வலிமை ப்ரெஷ்ஷான கதை... அது அனைத்து எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும்... எச் வினோத் உறுதி

சென்னை : நடிகர் அஜித்குமார், ஹுமா குரோஷி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் வலிமை.

இந்தப் படத்தை எச் வினோத் இயக்கியுள்ளார். படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளது.

இந்நிலையில் இந்தப் படம் குறித்தும் முந்தைய நேர்கொண்ட பார்வை படம் குறித்து எச் வினோத் பகிர்ந்து கொண்டார்.

நடிகர் அஜித்குமார்

நடிகர் அஜித்குமார்

நடிகர் அஜித்குமார், ஹுமா குரோஷி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ள படம் வலிமை. இந்தப் படத்தில் நடிகர் அஜித்தின் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இடம்பெற்றுள்ளன. படத்தை இயக்கியுள்ளார் எச் வினோத். தயாரித்துள்ளார் போனிகபூர்.

வலிமை படம்

வலிமை படம்

சமீபத்தில் படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் மற்றும் பைக் ஸ்டண்டுகள் உள்ளிட்டவை போஸ்டர்களாக வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. படத்தின் டீசர் மற்றும் பாடல்களும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன. படத்தின் ரிலீஸ் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து எதிர்பார்ப்பில் உள்ளனர்.

நேர்கொண்ட பார்வை படம்

நேர்கொண்ட பார்வை படம்

முன்னதாக அஜித் -எச் வினோத் மற்றும் போனிகபூர் இணைந்து நேர்கொண்ட பார்வை படத்தை ரிலீஸ் செய்தனர். இந்தப் படததில் வழக்கறிஞராக நடித்திருந்தார் அஜித் பெண்களின் உரிமைக்காக அவர் போராடுவதாக கதைக்களம் அமைந்திருந்தது.

பிங்க் படத்தின் ரீமேக்

பிங்க் படத்தின் ரீமேக்

இநதப் படம் பாலிவுட்டில் அமிதாப் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்காக அமைந்திருந்தது. இந்தப் படம் தெலுங்கிலும் வக்கீல் சாப் என்ற பெயரில் வெளியானது. ,இந்நிலையில் இயக்குநர் எச் வினோத் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படங்கள் குறித்து தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

எச் வினோத் பேட்டி

எச் வினோத் பேட்டி

நேர் கொண்ட பார்வை படம் பிங்க் படத்தின் ரீமேக்காக வெளியானதால், அதன் கதை அனைவருக்கும் தெரிந்திருந்தது என்றும் அதனால் அந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை என்றும் அவர் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 ப்ரெஷ்ஷான வலிமை கதை

ப்ரெஷ்ஷான வலிமை கதை

ஆனால் தற்போது உருவாகியுள்ள வலிமை படத்தின் கதை ப்ரெஷ்ஷானது என்றும் அது ரசிகர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் தாண்டி அனைத்து தளங்களிலும் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் எச் வினோத் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X