எச் வினோத் ஏமாற்றிவிட்டார்... படம் பார்த்துவிட்டு கதறி அழுத அஜித் ரசிகர்
சென்னை : நடிகர் அஜித்தின் வலிமை படம் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
படத்தை தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய எச் வினோத் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் எதிர்பார்த்தபடி படம் அமையவில்லை என்று அஜித் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

அஜித்தின் வலிமை படம்
நடிகர் அஜித்தின் வலிமை படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் 2 வருடங்கள் கழித்து வெளியாகியுள்ளது. முன்னதாக எச் வினோத் -போனி கபூர் கூட்டணியில் வெளியான நேர்கொண்ட பார்வை படம் ரீமேக்காக வெளியான நிலையில் தற்போது இந்தப் படம் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் கடந்த இரு ஆண்டுகளாக வலிமை படத்திற்காக காத்திருந்தனர். தீபாவளி ரேசிலிருந்து விலகிய வலிமை, கடந்த பொங்கலன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் பொங்கல் ரிலீசிலிருந்தும் பின்வாங்கியது.

4 மொழிகளில் வலிமை
இந்நிலையில் இன்றைய தினம் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் படம் ரிலீசாகியுள்ளது. உலகளவில் 4000 திரையரங்குகளிலும் தமிழ்நாட்டில் மட்டும் 607 திரையரங்குகளிலும் வலிமை ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

ரசிகர்கள் கொண்டாட்டம்
இன்றைய தினம் அதிகாலை 4 மணியளவில் படத்தின் முதல் ஷோ திரையிடப்பட்டது. இதையொட்டி ரசிகர்கள் நள்ளிரவு முதலே திரையரங்குகளில் கொண்டாட்டத்துடன் காணப்பட்டனர். இதனிடையே, படம் எதிர்பார்க்கப்பட்ட அளவில் ரசிகர்களுக்கு முழுமையான திருப்தியளிக்காத நிலையும் காணப்படுகிறது.
Include captionBy using this embed, you agree to Instagram's API Terms of Use.
கதறி அழுத ரசிகர்
ரசிகர் ஒருவர் வலிமை படத்தை பார்த்துவிட்டு திரையரங்கின் வெளியில் பேட்டி அளித்தபோது கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எச் வினோத் ரசிகர்களை ஏமாற்றிவிட்டதாக அவர் கதறி அழுதார். மேலும் தீரன் அதிகாரம் ஒன்று படம் போல வலிமை இல்லை என்றும் அஜித்திற்காக மட்டுமே படத்தை பார்த்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











