தல ரசிகர்களை கதறவிட்ட சிவா: துள்ளிக் குதிக்க வைத்த வினோத்
Recommended Video

சென்னை: தல ரசிகர்கள் கேட்காமலேயே அப்டேட் கொடுத்துள்ளார் ஹெச். வினோத்.
2014ம் ஆண்டில் இருந்து அஜித்தை மொத்த குத்தகைக்கு எடுத்துவிட்டார் இயக்குநர் சிவா. வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என்று நான்கு படங்களை வரிசையாக எடுத்தார் சிவா.
ஒவ்வொரு படத்திற்கும் அப்டேட் கேட்டு தல ரசிகர்கள் கெஞ்சிக் கதறுவார்கள்.

அப்டேட்
விஸ்வாசம் படத்திற்கு எல்லாம் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் எப்படி கெஞ்சினார்கள், கதறினார்கள் என்பது சூர்யா ரசிகர்களுக்கு நன்கு தெரியும். ஏனென்றால் என்.ஜி.கே. அப்டேட் கேட்டு அவர்கள் செல்வராகவனிடம் அதே போன்று தான் கெஞ்சுகிறார்கள்.

அஜித்
யார் கெஞ்சினாலும், கதறினாலும் அப்டேட் மட்டும் கொடுக்கவே மாட்டேனே என்று சிவா ஒரு முடிவோடு இருந்தார். இந்நிலையில் தான் அஜித்தை வைத்து படம் எடுக்கும் வினோத்தோ கேட்காமலேயே அப்டேட் கொடுத்து அசத்திவிட்டார்.

போஸ்டர்
தல நடித்து வரும் படத்திற்கு நேர்கொண்ட பார்வை என்று ஒரு பெயரை வைத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுவிட்டார் வினோத். முன்னறிவிப்பு இன்றி வெளியிட்டாலும் அப்டேட் அப்டேட் தானே.
தல ரசிகர்கள்
முதன்முறையாக கேட்காமலேயே அப்டேட் வந்ததை பார்த்து தல ரசிகர்களுக்கு கண்ணில் வியர்த்துவிட்டது.


Click it and Unblock the Notifications











