விஜய்யின் பி.ஆர்.ஓவா ஹெச்.வினோத்?.. சிவகார்த்திகேயனை அட்டாக் செஞ்சாரா?.. ஏன் இப்படி?.. ரசிகர்கள் வருத்தம்

சென்னை: ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மலேசியாவில் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. இதில் பலர் கலந்துகொண்டார்கள். விஜய் அந்த விழாவில் பேசியது எப்படி கவனத்தை ஈர்த்து வரவேற்பை பெற்றதோ; அதேபோல் இயக்குநர் ஹெச்.வினோ பேசியதும் கவனத்தை ஈர்த்து ரசிகர்களிடம் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. அதிலும் அவர் சிவகார்த்திகேயனை டார்கெட் வைத்து பேசியதாக பலர் சொல்கிறார்கள்.

ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதுதான் விஜய்யின் கடைசி படம் என்று சொல்லப்படுகிறது. இன்னும் பத்து நாட்களே ரிலீஸுக்கு இருப்பதால் இப்படத்தை திருவிழா போல் கொண்டாடுவதற்கு விஜய்யின் ரசிகர்கள் உச்சக்கட்ட வைபில் இருக்கிறார்கள். இது ஒருபக்கம் இருக்க படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருக்கும் புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் வைத்து நேற்று முன்தினம் நடந்தது.

எங்கும் ரசிகர்கள்: முதன்முறையாக விஜய்யின் பட ஆடியோ லான்ச் மலேசியாவில் நடப்பதால்; அந்த நாட்டில் வாழும் விஜய் ரசிகர்கள் விழாவை பார்ப்பதற்காக சென்றார்கள். அவர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டிலிருந்தும் ஏராளமான ரசிகர்களும் பிரபலங்களும் மலேசியா சென்று அவ்விழாவில் கலந்துகொண்டார்கள். இதன் காரணமாக மலேசியா எங்கும் ஜனநாயகன் மயமாகவே இருந்தது. வெளிநாட்டிலும் தளபதிக்கு இருக்கும் மாஸை பார்த்து பிரமித்து போனார்கள் திரைத்துறையினர்.

H Vinoth Indirectly Target Sivakarthikeyan s Parasakthi Jana nayagan Audio Launch Turns Heated
Photo Credit:

விஜய்யின் சூப்பர் பேச்சு: விழாவில் பேசிய விஜய், 'கடந்த 30 வருடங்களாக எனக்கு ஒன்று என்றால் தியேட்டரில் ரசிகர்கள் நின்றார்கள். இனி வரும் 33 ஆண்டுகளுக்கு அவர்களுடன் நான் நிற்கப்போகிறேன். எனக்காக அனைத்தையும் விட்டுக்கொடுத்த அவர்களுக்காக சினிமாவை நான் விட்டுக்கொடுக்கிறேன். நான் நன்றி மட்டும் சொல்லிவிட்டு போகிறவன் இல்லை. நன்றிக்கடனை தீர்த்துவிட்டுத்தான் போவேன்' என தெரிவித்திருந்தார். அவரது பேச்சு அனைவரையும் எமோஷனல் ஆக்கியது.

ஹெச்.வினோத் பேச்சு: அதேபோல் இயக்குநர் ஹெச்.வினோத் பேசுகையில், "ஜனநாயகன் ரீமேக் படம் என்று சிலர் சொல்கிறார்கள். பாதி ரீமேக் என்று சொல்கிறார்கள். இன்னும் சிலரோ இந்தப் படம் முன்ன பின்ன இருக்கும். அந்த கேப்பில் புகுந்து படத்தை அடித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் நான் ஒன்று சொல்லிக்கொள்கிறேன். ஐயா இது தளபதி படம்" என பேசியிருந்தார். தற்போது அவரது பேச்சு விவாதத்தை கிளப்பியிருக்கிறது.

என்ன விவாதம்?: அதாவது உள்ளே புகுந்து அடிச்சிடலாம்னு பார்க்கிறார்கள் என அவர் சொன்னது சிவகார்த்திகேயனையும், பராசக்தி டீமையும்தான். ஜனநாயகனுக்கு போட்டியாக பராசக்தி வருவதை நாங்கள் விரும்பவில்லை என்பதை மறைமுகமாக கூறியிருக்கிறார் வினோத் என ரசிகர்கள் சொல்லிவருகிறார்கள். அதுமட்டுமின்றி அஜித்தை வைத்து மூன்று படங்கள் இயக்கியபோது கொடுத்த பேட்டிகளில் எல்லாம் சினிமா பற்றியும், ரசிகர்கள் பற்றியும் அவ்வளவு பக்குவமாக பேசியிருந்தார். ஆனால் இப்போது என்ன ஆனதோ தெரியவில்லை; விஜய்யின் பி.ஆர்.ஓ மாதிரி பேசுகிறார். ஏன் இப்படி மாறிவிட்டாரோ என்று ரசிகர்கள் கமெண்ட்ஸையும் தெரிவித்துவருகிறார்கள்.

More from Filmibeat

Read more about: jana nayagan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X