ஜனநாயகன் பட பிரச்னை.. பொறுமை இழந்த ஹெச்.வினோத்?.. அவரோட அடுத்த மூவ் என்ன தெரியுமா?

சென்னை: பார்த்திபனிடம் உதவி இயக்குநராக இருந்த ஹெச்.வினோ சதுரங்க வேட்டை படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதனையடுத்து கார்த்தியை வைத்து இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படமும் மெகா ஹிட்டடித்தது. இரண்டு படங்களின் வெற்றி முன்னணி ஹீரோக்களுடன் இணையும் வாய்ப்பை அவருக்கு வழங்கியது. அஜித்தை வைத்து மூன்று படங்கள் இயக்கிய அவர்; விஜய்யை வைத்து ஜனநாயகன் படத்தை இப்போது இயக்கியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் தற்போதைய தலைமுறை இயக்குநர்களில் முக்கியமானவர் ஹெச்.வினோத். அவர் இயக்கிய முதல் படமான சதுரங்க வேட்டை க்ரைம் ஜானரில் உருவாக்கப்பட்டிருந்தாலும்; அதில் தனது ஸ்டைலை வைத்து புதிதாக ப்ரெசண்ட் செய்திருந்தார். அதனையடுத்து இயக்கிய தீரன் படத்திலும் மேக்கிங்கில் அதகளம் செய்திருந்தார். முதல் இரண்டு படங்களே மெகா ஹிட்டானதால் அவர் முன்னணி இயக்குநர் லிஸ்ட்டில் சேர்ந்துவிட்டார்.

அஜித்துடன் மூன்று படங்கள்: அந்த இரண்டு படங்களின் வெற்றி அஜித்தை இயக்கும் வாய்ப்பை உருவாக்கிக்கொடுத்தது. பிங்க் படத்தின் ரீமேக்காக நேர்கொண்ட பார்வை, அதையடுத்து வலிமை, துணிவு என வரிசையாக மூன்று படங்களை இயக்கினார். மூன்று படங்களுமே பெரிய வரவேற்பை பெறவில்லை. முக்கியமாக வினோத்துக்குள் இருந்த திறமையை முழுவதுமாக இந்தப் படங்களில் பயன்படுத்தவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன.

H Vinoth Moves On Amid Jana Nayagan Release Issues New Project with Dhanush on Cards
Photo Credit:

விஜய்யுடன் ஜனநாயகன்: அஜித்துடன் வரிசையாக மூன்று படங்கள் பணியாற்றிவிட்டு விஜய்யை வைத்து ஜனநாயகன் படத்தை இயக்கினார் வினோத். இது முழுக்க முழுக்க அவரது சொந்த கதை இல்லை. பகவந்த் கேசரி படத்திலிருந்து சில விஷயங்களை எடுத்து தமிழ் ஆடியன்ஸுக்கு தகுந்தபடி கையாண்டிருக்கிறார். படமானது ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. இதுதான் விஜய்யின் கடைசி படம் என்றும் ஒரு தகவல் ஓடுவது குறிப்பிடத்தக்கது.

படம் ரிலீஸ் இல்லை: பெரிய சம்பவத்தை இதில் வினோத் செய்திருப்பார் என்று பலரும் ரிலீஸுக்கு காத்திருந்தார்கள். ஆனால் சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் கொடுக்காததால் படமானது ரிலீஸாகவில்லை. கடந்த ஒரு மாதமாக இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. எப்போது ரிலீஸாகும் என்பது இதுவரை தெரியவில்லை. ஜனநாயகனை சுற்றி பிரச்னைகள், வாதங்கள் முழு வேகத்தோடு நடந்துவந்தாலும்; எப்போதும் அமைதியை இழக்காத வினோத் இந்த முறையும் அப்படியே இருக்கிறார். இதுவரை இந்தப் பிரச்னை குறித்து அவர் ஒரு வார்த்தைக்கூட சொல்லவில்லை.

அடுத்த பட வேலைகள்: சூழல் இப்படி இருக்க ஹெச்.வினோத் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது ஜனநாயகன் ரிலீஸ் பிரச்னை எப்போது தீரும் என்று தெரியாத வினோத்; தனது அடுத்த பட வேலைகளை ஆரம்பிக்கும் பணிகளில் இறங்கியிருக்கிறாராம். தனுஷ் உள்ளிட்ட இரண்டு முன்னணி ஹீரோக்களிடம் அவர் கதை சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கும் படத்தை முடித்துவிட்டு வினோத் கதையில் தனுஷ் நடிப்பார் என்றும்; அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்றும் சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Read more about: jana nayagan vijay
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X