Kamal Haasan: அப்போ கமலோட 233வது படம் யார் கூட.. கிளம்பிய விஸ்வரூப கேள்வி.. அந்த இயக்குநர் தானா?
சென்னை: கமல்ஹாசனின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது 234வது படத்தின் ஹாட் அப்டேட் வெளியாகி உள்ளது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் 234வது படத்தில் நடிக்கப் போகிறார் என்றும் 2023ம் ஆண்டு படப்பிடிப்பு நடைபெற்று 2024ல் படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 233வது படம் குறித்த அப்டேட் எப்போ வரும் என்றும் அந்த படத்தை இயக்கப் போவது யார் என்கிற கேள்விகள் கிளம்பி உள்ளன.

விக்ரம் எத்தனையாவது படம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் 232வது படம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் 450 கோடி வசூல் பெற்று இந்த ஆண்டின் மிகப்பெரிய கோலிவுட் பிளாக்பஸ்டராக மாறியது.

231வது படம்
விக்ரம் படத்துக்கு பிறகு வெளியாக உள்ள இந்தியன் 2 திரைப்படம் தான் 233வது படமா? அதற்கு பிறகு 234வது படத்தை மணிரத்னம் இயக்கப் போகிறாரா? என சில ரசிகர்கள் நினைக்க, இந்தியன் 2 திரைப்படம் 231வது படம் என கமல் ரசிகர்கள் உறுதிப்பட தெரிவித்து வருகின்றனர். விக்ரம் படத்திற்கு முன்னதாகவே இந்தியன் 2 ஆரம்பமானது என்றும் விஸ்வரூபம் 2 கமல்ஹாசனின் 230வது படம் என்றும் கூறுகின்றனர்.

மணிரத்னம் இயக்கத்தில்
ராஜ்கமல் நிறுவனம், உதயநிதி ஸ்டாலினி ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் என மூன்று முன்னணி நிறுவனங்கள் இணைந்து கமல்ஹாசன் நடிக்க மணிரத்னம் இயக்கப் போகும் படம் 234வது படம் என்றும் 2024ல் வெளியாகும் என கமல் பிறந்தநாள் ட்ரீட் கிடைத்துள்ளது.

233வது பட இயக்குநர் யார்?
234வது படத்தின் அறிவிப்பை கமல் வெளியிட்டுள்ள நிலையில், 233வது படத்தை இயக்கப் போவது யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. வலிமை, துணிவு படங்களை இயக்கி உள்ள ஹெச். வினோத் இயக்கத்தில் கமல் நடிகக்ப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் தான் இயக்கப் போகிறாரா? என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன.

மகேஷ் நாராயணன்
மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல்ஹாசன் ஏற்கனவே நடிக்கப் போவதாக தெரிவித்த நிலையில், அவர் தான் 233வது படத்தை இயக்கப் போகிறார். அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

அப்போ விக்ரம் 3
மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் 3 படத்தில் கமல் எப்போ நடிப்பார் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. தளபதி 67 படத்தை முடித்து விட்டு கைதி 2 படத்தை பண்ணிவிட்டு விக்ரம் 3 படத்தைத் தான் லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்றும், அதற்குள் கமல் கைவசம் இருக்கும் படங்களை முடித்து விட்டு நடிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











