ஜன நாயகனுக்கு சென்சார் கிடைக்கல.. சத்தமே இல்லாமல் H. வினோத் செய்த தரமான சம்பவம்!
சென்னை: தமிழ் சினிமாவில் 'சதுரங்க வேட்டை' படத்தின் மூலம் அறிமுகமாகி, 'தீரன் அதிகாரம் ஒன்று', 'நேர்கொண்ட பார்வை', 'துணிவு' என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்தவர் இயக்குநர் ஹெச். வினோத். சமூகத்தில் நடக்கும் எதார்த்தமான அரசியல் மற்றும் பொருளாதார குற்றங்களை மிகவும் துணிச்சலாகவும், விறுவிறுப்பாகவும் திரையில் கொண்டு வருவதில் இவருக்கு நிகர் இவரே.
இப்படி இருக்கையில், ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'ஜன நாயகன்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலும் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படம் விஜய்யின் அரசியல் வருகைக்குப் பிந்தைய மிக முக்கியமான படம் என்பதால், அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்களின் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது. அதுவும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் உருவெடுத்துள்ளதால், படத்தின் ரிலீஸ்க்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இப்படி இருக்கையில் படத்தின் இயக்குநர் ஹெச். வினோத் சத்தமே இல்லாமல் ஒரு வேலையைச் செய்து வருகிறார்.
விமர்சகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களின் கணிப்புப்படி, 'ஜன நாயகன்' திரைப்படம் தமிழ் சினிமாவின் பல வசூல் சாதனைகளை தவிடுபொடியாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"ஹெச். வினோத்தின் அழுத்தமான திரைக்கதையும், விஜய்யின் மாஸ் ஸ்கிரீன் பிரசன்ஸும் இணையும் போது, அது தியேட்டர்களில் திருவிழா போன்ற கொண்டாட்டத்தை உருவாக்கும். குறிப்பாக படத்தின் வசனங்கள் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய அரசியல் விருந்தாக இருக்கும்" என்று சினிமா விமர்சகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஜன நாயகன் லீக்: மேலும் மொத்த படமும் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தமிழ்நாடு சைபர் காவல்துறை 9 பேரை கைது செய்து விசாரித்து வருகிறது. படம் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை பலருக்கும் ஏற்படுத்தினாலும், ஜன நாயகன் முறையாக எப்போது வெளியானாலும் பாக்ஸ் ஆபீஸில் ரெக்கார்டு படைக்கும் என்று பலரும் கூறி வருகிறார்கள்.
சத்தமில்லாமல்: இப்படி இருக்கையில் இயக்குநர் ஹெச். வினோத் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி உள்ளார். இதில் முதன் முதலாக குற்றம் கடிதல் இயக்குநர் பிரம்மா படத்தை இயக்க நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறாராம். அவரது படத்தின் ரிலீஸ் பிரச்னை இன்னும் தீராமல் இருக்கும் போது, தனது சொந்த படத்தை தயாரிக்க ஆரம்பித்துவிட்டாரே என்று பலரும் பேசி வருகிறார்கள். முதலமைச்சர் படம் வெளியாவதில் இனி எந்த சிக்கலும் இருக்காது எனவும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications