போடு வெடிய.. விஜய், அஜித் பட இயக்குநருடன் இணையும் ரஜினிகாந்த்?.. செம கூட்டணியா இருக்குமே

சென்னை: விஜய்யை வைத்து ஜன நாயகன் படத்தை இயக்கிவருகிறார் வினோத். படமானது அடுத்த வருடம் ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதற்கிடையே கமல் ஹாசனும், ஹெச்.வினோத்தும் இணைந்து ஒரு படம் பணியாற்றுவதாக இருந்தது. அதுதொடர்பான அறிவிப்பு வீடியோவும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அதற்கு பிறகு அந்தப் படம் ட்ராப் செய்யப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரஜினிகாந்த்தை சமீபத்தில் நேரில் சந்தித்தார் அவர்.

சதுரங்க வேட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஹெச்.வினோத். முதல் படத்திலேயே சென்சிட்டிவான சப்ஜெக்ட்டை கையில் எடுத்து அதை மிக நேர்த்தியாக படமாக்கினார். படத்தில் இடம்பெற்ற வசனங்களும், காட்சியமைப்பும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. முதல் படத்திலேயே தான் எவ்வளவு தேர்ந்த இயக்குநர் என்பதை அவர் நிரூபித்துவிட்டதால் அவரது படங்கள் மீது ஒரு எதிர்பார்ப்பு எழ ஆரம்பித்தது.

தீரன் அதிகாரம் ஒன்று: அந்தப் படத்துக்குப் பிறகு கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கினார். உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதேசமயம் காவல் துறையினர் என்கவுன்ட்டர் செய்வதையும், காவல் துறையையும் வினோத் ரொம்பவே புகழ்ந்திருக்கிறார் என்ற சர்ச்சையும் எழுந்தது. அதை காலப்போக்கில் அவரும் புரிந்துகொண்டு இனி இவ்வாறு படம் செய்ய மாட்டேன் என்றும் கூறினார்.

H Vinoth to direct a film starring Rajinikanth Here are details
Photo Credit:

அஜித்துடன் கூட்டணி: முதல் இரண்டு படங்கள் மெகா ஹிட்டானதையடுத்து அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது வினோத்துக்கு. ஆனால் அஜித்துடன் இணைந்த முதல் படம் தனது சொந்த கதையாக இல்லாமல் பிங்க் படத்தை ரீமேக் செய்தார் வினோத். அப்படி ரீமேக் செய்யப்பட்ட நேர்கொண்ட பார்வை படம் கலவையான விமர்சனங்களை பெற அடுத்ததாக வலிமை படத்தை இயக்கினார். அந்தப் படம் கதை ரீதியாக வரவேற்பை பெற்றாலும் ஏதோ ஒன்று மிஸ் ஆனதாக ரசிகர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அவர் இயக்கிய துணிவு படம் ஹிட்டானது.

ஜன நாயகன் வினோத்: சூழல் இப்படி இருக்க விஜய்யின் கடைசி படம் என்று சொல்லப்படும் ஜன நாயகன் படத்தை அவர் இப்போது இயக்கிவருகிறார். படத்தின் பெரும்பாலான பகுதி ஷூட்டிங் முடிந்துவிட்டது. விஜய்யும் தன்னுடைய போர்ஷனை முடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. முதன்முறையாக அவர் விஜய்யுடன் இணைந்திருப்பதால் இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. படமானது ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

ரஜினியுடன் சந்திப்பு: ஜன நாயகன் படத்தை முடித்துவிட்டு வினோத் யாரை இயக்குவார் என்ற கேள்வி மேலோங்கியிருந்தது. இந்நிலையில் ரஜினிகாந்த்தை அவர் சமீபத்தில் சந்தித்திருக்கிறார். அந்த சந்திப்பின்போது ஒரு கதையின் அவுட் லைனை அவர் சொன்னதாகவும்; அது பிடித்துவிட்டதால் அந்த லைனை டெவலப் செய்யும்படி ரஜினி பணித்ததாகவும் சொல்லப்படுகிறது. அநேகமாக முழு கதையை கேட்ட பிறகு வினோத் இயக்கத்தில் ரஜினி நடிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.

கமல் படம் ட்ராப்: இதற்கிடையே துணிவு படத்தை முடித்த பிறகு கமல்ஹாசனை வைத்துதான் ஒரு படம் இயக்குவதற்கு வினோத் கமிட்டானார். அதுதொடர்பான வீடியோவும் வெளியானது. ஆனால் சில காரணங்களால் அது ட்ராப்பாகிவிட்டது. இப்போது ரஜினியுடன் அவர் இணையவிருப்பதாக கூறப்படுவதால்; கமலை வைத்து செய்ய நினைத்த சம்பவத்தை இந்தப் படத்தில் வினோத் செய்வார் என்று அவரது ரசிகர்கள் கருத்து தெரிவிக்க ஆரம்பித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X