'தல 60' படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா?
Recommended Video

சென்னை: நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித் யார் இயக்கத்தில் நடிக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.
போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கிய நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்துள்ளார் அஜித். படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி நிறைவடைந்தது. படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியாக உள்ளது.
இதையடுத்து அஜித் யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது.

கதை
அஜித்தை வைத்து தொடர்ந்து நான்கு படங்களை இயக்கிய சிவா புதுக் கதையை தயார் செய்து வைத்துள்ளாராம். அஜித்துக்காக எழுதப்பட்ட அந்த கதையை மெருகேற்றிக் கொண்டிருக்கிறாராம்.

நேர்கொண்ட பார்வை
அஜித் நேர்கொண்ட பார்வை படத்தை முடித்த பிறகு மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்கப் போவதாக கூறப்பட்டது. ஆனால் அஜித் ஹெச். வினோத் இயக்கத்தில் தான் நடிக்கப் போகிறாராம். தல 60 படம் ரீமேக் இல்லை மாறாக வினோத் அஜித்துக்காக செம மாஸ் கதை எழுதி வைத்திருக்கிறாராம்.

தயாரிப்பு
நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித் ஹெச். வினோத் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் படத்தையும் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

60
தல 50வது படம் மங்காத்தா. அதனால் தல 60 மங்காத்தா 2 ஆக இருந்தால் நன்றாக இருக்கும். தல வெங்கட் பிரபு இயக்கத்தில் மங்காத்தா 2 படத்தில் நடிங்க என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











