இது அதுல.. அதே தீப்பந்தம்.. கமலுக்கு எழுதிய கதையில் தான் விஜய் நடிக்கிறாரா?.. தளபதி 69வது தேறுமா?
சென்னை: ராஜ்கமல் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், அந்த படம் அப்படியே டிராப் ஆகிவிட்டது. இந்நிலையில், அந்த படத்தின் கதையில் தான் விஜய் நடிக்கப் போகிறாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
கமல்ஹாசன் - எச். வினோத் கூட்டணியில் அறிவிக்கப்பட்ட படத்தின் மோஷன் போஸ்டரை ஷேர் செய்து தற்போது நெட்டிசன்கள் அதிலும் தீப்பந்தம் இருந்தது. இங்கேயும் தீப்பந்தம் இருக்கிறது. இது அதுல என கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்.

விஜய் படங்களின் அறிவிப்புகள் மற்றும் ரிலீஸுக்கு முன்பாக கொடுக்கப்படும் பில்டப்புகள் கடந்த சில ஆண்டுகளாக அதிகமாகவே உள்ளன. ஆனால், படம் வெளியான ஒரு வாரத்திலேயே படம் படுத்து விடுகிறது என்கிற விமர்சனங்களும் கடுமையாக முன் வைக்கப்பட்டு வருகின்றன.
அட்மின் தான் துணை தயாரிப்பு: தளபதி 69 படத்தின் அறிவிப்பை கவனித்துப் பார்த்தால் ஜெகதீஷ் பழனிச்சாமி தான் படத்தின் துணை தயாரிப்பு என போட்டுள்ளனர். நடிகர் விஜய்யின் சோஷியல் மீடியா அட்மினாக இருந்த ஜெகதீஷ் பழனிச்சாமியை விஜய் தயாரிப்பாளராக மாற்றியுள்ளார் என்று கூறுகின்றனர். தி ரூட் எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ஜெகதீஷ் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரிவால்வர் ரீட்டா படத்தை தயாரித்து வருகிறார். அடுத்ததாக தளபதி 69 படத்தை கேவிஎன் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளார்.
கமல் பட கதையா?: கமல்ஹாசனின் 233வது படத்தை எச். வினோத் இயக்கப் போவதாக வெளியான அறிவிப்பில் செம ஃபயராக டார்ச்ச் லைட் பிடித்துக் கொண்டிருந்த கமலுக்கு கையில் தீப்பந்தத்தை எச். வினோத் கொடுத்திருந்தார். இந்நிலையில், அதே டெய்லர் அதே வாடகை என்பது போல விஜய் கையிலும் அதே தீப்பந்தத்தை எச். வினோத் கொடுத்திருக்கும் நிலையில், கமல்ஹாசனுக்கு சொன்ன கதை தானா? என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.
ஓவர் பில்டப் உதவாது: எச். வினோத் இயக்கிய படங்களிலேயே ரசிகர்களை அதிகம் கவர்ந்த படங்கள் என்றால் சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று தான். அஜித்தை வைத்து அவர் இயக்கிய படங்கள் எதுவுமே அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்து இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கவில்லை. இந்நிலையில், விஜய்க்கு ஒரு நல்ல வெற்றிப் படத்தை எச். வினோத் கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
400 கோடி பட்ஜெட் படமே காப்பி?: 400 கோடி பட்ஜெட்டில் விஜய்யை வைத்து தயாரிப்பு நிறுவனம் படம் தயாரிக்க முன் வந்த நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய ராஜதுரை படத்தின் காப்பி தான் என கிண்டல் செய்து வருகின்றனர். சிஎஸ்கே சீன் வைத்ததால் தான் மற்ற மாநில ரசிகர்கள் படத்தை புறக்கணித்து விட்டார்கள் எனக் கூறி வருகிறார். படத்தின் கிளைமேக்ஸில் நடக்கும் காட்சி கூட ஹாலிவுட் படத்தில் இருந்தே சுடப்பட்ட சீன்கள் தான் என்றும் ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிகின்றன. வலிமை படத்தில் ஜாக்கி சான் படத்தின் காட்சிகளை வைத்தது போல எச். வினோத் வைக்காமல் சொந்தமாக விஜய்க்கு ஒரு நல்ல ஃபேர்வெல் படத்தைக் கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.


Click it and Unblock the Notifications











