Lokesh Kanagaraj - லோகேஷ் கனகராஜ் மட்டுமில்லை ஹெச்.வினோத்தும் சினிமாவிலிருந்து விலகலா? பரபரக்கும் கோலிவுட்
சென்னை: H.Vinoth (ஹெச்.வினோத்) பத்து படங்களை இயக்கிவிட்டு சினிமாவிலிருந்து ஒதுங்கிவிடுவேன் என லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கும் சூழலில் அடுத்ததாக ஹெச்.வினோத்தும் அதே வழியை பின்பற்றவிருக்கிறார் என தகவல் வெளியாகியிருக்கிறது.
கோலிவுட் இப்போது கார்த்திக் சுப்புராஜ்,லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், ஹெச்.வினோத் போன்ற இளம் இயக்குநர்களின் கைகளில் இருக்கிறது. அவர்களும் வித்தியாச கதைக்களங்களுடன் பெரிய ஹீரோக்களை வைத்து படங்களை இயக்கிவருகின்றனர். இவர்களில் லோகேஷ் கனகராஜின் கிராஃப் உச்சத்தில் இருக்கிறது. கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தின் மெகா வெற்றிக்கு பிறகு லோகேஷின் டேட்களை வாங்குவதில் பல ஹீரோக்களும், தயாரிப்பு நிறுவனங்களும் மும்முரம் காட்டுகின்றன.

லியோ: அவர் இப்போது விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கிவருகிறார். ஏற்கனவே விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி பிரமாண்ட வெற்றியை பதிவு செய்திருக்கிறார். இதன் காரணமாக மீண்டும் இணைந்திருக்கும் இந்தக் கூட்டணி இந்த முறையும் பெரும் வெற்றியை பதிவு செய்யும் என நம்பப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் இன்னும் பத்து நாட்கள் பாக்கி இருக்கும் சூழலில் படமானது அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
நா ரெடி சிங்கிள்: இதற்கிடையே நாளை (ஜூன் 22) விஜய்யின் பிறந்தநாள் கொண்டாடப்படவிருக்கும் சூழலில் அதனையொட்டி படத்திலிருந்து முதல் சிங்கிள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. நா ரெடிதா என தொடங்கும் பாடலின் ப்ரோமோ நேற்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அந்தப் பாடலை விஜய், அனிருத், பிக்பாஸ் அசல் கோலார் உள்ளிட்டோர் பாடியிருக்கின்றனர்.
லோகேஷ் பேட்டி: சூழல் இப்படி இருக்க லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்திருந்தார். அந்தப் பேட்டியில்,"எனது எல்சியூ கான்செப்ட்டில் நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. பத்து படங்களை இயக்கிவிட்டு சினிமாவிலிருந்து விலகிவிடுவேன்" என கூறியிருந்தார். ஒரு இயக்குநர் பீக்கில் இருக்கும்போது இப்படி சொல்கிறாரே என ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அவர் தொடர்ந்து படங்கள் இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

அவர் மட்டுமல்ல: இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் மட்டுமின்றி துணிவு படத்தை இயக்கிய ஹெச்.வினோத்தும் மொத்தம் பத்து படங்களை இயக்கிவிட்டு சினிமாவுக்கு குட் பை சொல்ல திட்டமிட்டிருப்பதாக புதிய தகவல் ஒன்று உலாவிக்கொண்டிருக்கிறது. வினோத் எப்போதும் சமூக அக்க்றையுள்ள விஷயங்களை தனது படங்களில் பேசக்கூடியவர். தற்கால தலைமுறை இயக்குநர்களில் வினோத் முக்கியத்துவம் வாய்ந்தவராக கருதப்படுகிறார். அவர் இப்படி முடிவு எடுத்திருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கமலுடன் வினோத்: சதுரங்க வேட்டை, தீரன் படங்கள் பெரும் கவனம் ஈர்த்த வினோத் அஜித்தை மூன்று படஙக்ளை இயக்கினார். அவற்றில் துணிவு படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.அடுத்ததாக அவர் கமல் ஹாசனை வைத்து ஒரு படம் இயக்கப்போகிறார்.அந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவிருக்கிறார் என கூறப்படுகிறது. விரைவில் ஷூட்டிங் தொடங்கவுள்ளது.


Click it and Unblock the Notifications











